

மதுரை
தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட் டமைப்பின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடந்தது. மாநாட்டை தொடங்கி வைத்து ஆட்சியர் த.சு.ராஜசேகர் விழா மலரை வெளியிட, வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.
மாநாட்டில் தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.கணேசன் பேசிய தாவது: தீபாவளிக்கு ஒரு மாதத் துக்கு முன்பே பட்டாசு வணிகர் களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமம் புதுப்பித்தால் போதும் என்ற அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
பட்டாசு உற்பத்தி தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படாமல் தொடர்ந்து நடைபெறுவதற்கு தமிழக அரசே காரணம்.
இனிமேல் பழைய முறைப்படி பட்டாசு தயாரிக்க முடியாது. அறி வியல் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் வழங்கிய புதிய விதி முறையைப் பின்பற்றி பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்வதற்கு நீதி மன்றம் அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இது தொடர் பான பிரமாணப் பத்திரத்தை ஆக. 6-ல் தாக்கல் செய்யும்போது நமக்கு சாதகமான தீர்ப்பு வரும்.
பசுமை பட்டாசு உற்பத்தி செய் வதன் மூலம் உலக அளவில் பல் வேறு இடங்களில் இருந்து நமக்கு அதிக ஆர்டர்கள் வரும். பட்டாசு களை ஆய்வுக்கு உட்படுத்த சிவ காசியில் பெரிய ஆய்வகம் ஒன்று தொடங்கப்படும் என்றார்.
மாநாட்டில் சட்டவிரோத பட்டாசு உற்பத்தி, சீனப் பட்டாசுகளை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.