வேலூர் தேர்தலை நிறுத்த திமுகதான் காரணம்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு 

வேலூர் தேர்தலை நிறுத்த திமுகதான் காரணம்: தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு 
Updated on
1 min read

வேலூர் 

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலை நிறுத்துவதற்கு நாங்கள் சதி செய்யவில்லை. தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுகதான் முழுக்க முழுக்க காரணம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.

வேலூர் மக்களவைத் தொகுதி யில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தத்தில் பிரச்சாரம் செய்தார். கே.வி. குப்பத்தில் அவர் பேசியதாவது:

இந்த மக்களவைத் தேர்தல் ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டும். வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது திட்டமிட்ட சதி என்று ஸ்டாலின் கூறிவருகிறார். நாங்கள் சதி செய்து தேர்தலை நிறுத்தவில்லை. மக்களுக்கு கொடுப்பதற்காக மூட்டை மூட் டையாக பதுக்கிய பணத்தை வருமான வரித் துறையினர் கண்டு பிடித்து தேர்தலை நிறுத்தினர். ஆனால், ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார். அதிமுக வேட்பாளரிடத் தில் ஏன் சோதனை நடத்தவில்லை என கேட்கிறார். எங்களிடம் இருந் தால்தானே சோதனை நடத்த முடியும்.

எனவே, தேர்தல் நிறுத்தப்பட்ட தற்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம். எந்தக் காரணத்தைக் கொண்டும் தேர்தலை நிறுத்தும் முயற்சியில் நாங்கள் ஈடுபட வில்லை. எங்களுக்கு மடியில் கன மில்லை வழியில் பயமில்லை.

மத்தியில், மாநிலத்தில் ஆட் சிக்கு வருவோம் என மூட்டை மூட் டையாக ஸ்டாலின் பொய் கூறினார். பொய்யை மாறி, மாறி கூறி ஏமாற்றி பெற்றதுதான் நாடாளுமன்ற தேர் தல் வெற்றி. ஒரு சாதாரண விவசாயி முதல்வர் ஆவதை அவரால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. ஒரு காலமும் அதிமுகவை வீழ்த்த முடியாது. ஆட்சியை கவிழ்க்க முடியாது. கட்சியை உடைக்க முடியாது.

தமிழகத்தில் மழை நீரை சேகரித்து தடுப்பணைகள் கட்டு வதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்து ரூ.600 கோடிக்கு பணிகள் நடக்கிறது. ரூ.500 கோடியில் 1,529 ஏரிகள் குளங்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நல்ல திட்டம் இல்லையா? 83 ஆண்டுகள் தூர் வாராத மேட்டூர் அணையில் தூர் வாரினோம். நூறு நாள் வேலைத் திட் டத்தை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்த மாட்டோம். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

கே.வி.குப்பத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும். மாவட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல் படுத்தப்படும். கவசம்பட்டு அருகே தடுப்பணை, தட்டபாறை மற்றும் மீனூர் கிராமங்களில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in