சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பரிதாபம்; பேருந்து மோதி சுவர் இடிந்ததில் புதுமாப்பிள்ளை உட்பட 2 ஊழியர்கள் உயிரிழப்பு; காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி: பாதுகாப்பு வசதியை அதிகரிக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம்

சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் பரிதாபம்; பேருந்து மோதி சுவர் இடிந்ததில் புதுமாப்பிள்ளை உட்பட 2 ஊழியர்கள் உயிரிழப்பு; காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதி: பாதுகாப்பு வசதியை அதிகரிக்கக் கோரி பணியாளர்கள் போராட்டம்
Updated on
2 min read

சென்னை

சென்னை வடபழனி போக்குவரத்து பணிமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மாநகர பேருந்து மோதி சுவர் இடிந்து விழுந்ததில் புதுமாப் பிள்ளை உட்பட 2 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தனர். 6 பேர் காயமடைந்தனர்.

சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பராமரிப்பு பணி நடை பெற்று வந்தது. 20-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப பணியாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது, பாலமுருகன் என்ற ஓட்டுநர் மாநகர பேருந்து (எண். 17இ) ஒன்றை பழுது பார்ப்பதற்காக பணிமனைக்குள் ஓட்டிவந்தார். அப்போது அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து பணிமனை யின் சுவர் மீது மோதியது.

பேருந்து மோதிய வேகத்தில் சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு பணியில் இருந்த தொழில் நுட்ப ஊழியர்களான சென்னை சாலிகிராமம் மதியழகன் நகரை சேர்ந்த கே.சேகர் (49), திருவண் ணாமலை மாவட்டம், நல்லான் பிள்ளை பெற்றாள் பகுதியை சேர்ந்த பி.பாரதி (33) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். இதில் பாரதிக்கு திரு மணமாகி 24 நாட்களே ஆகின் றன. மேலும் இந்த விபத்தில், எஸ்.மாசிலாமணி (49), எஸ்.தணி கைவேல் (41), டி.யுவராஜ்(43), ஆர்.பட்டுசாமி(38), ஏ.பாலமுருகன் (37), எம்.கலிசா (47) ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்த தகவல் அறிந்து தீயணைப்பு படை வீரர்களும், வடபழனி போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போக்கு வரத்து ஊழியர்களின் துணை யோடு காயமடைந்த ஊழியர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர், அவர் களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான போக்கு வரத்து தொழிலாளர்கள் பணி மனையில் திரண்டனர். பணிமனை களில் பாதுகாப்பு வசதி இல்லை, பேருந்துகளை பராமரிக்க போதிய உதிரி பாகங்கள்இல்லை எனக் கூறி போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இதனால், வடபழனி பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து களை இயக்குவது தடைபட்டது. இதற்கிடையே, போக்குவரத்து துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கணே சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விபத்து நடந்த வடபழனி பணிமனை யில் ஆய்வு செய்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்களுடன் பேச்சு நடத்தினர்.

தொழிலாளர்களின் கோரிக்கை கள் குறித்து படிப்படியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் உறுதியளித்தனர். இதைய டுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பினர். இந்த விபத்துக்கு காரணம் ஓட்டுநரின் கவனக் குறைவா? அல்லது பேருந்தில் பிரேக் பிடிக்கவில்லை? என பல் வேறு கோணங்களில் வடபழனி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்துக்கு காரண மான பேருந்தை ஓட்டிய பாலமுரு கன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜன் கூறும்போது, ‘‘விபத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து போதிய இழப் பீடு பெற்றுத்தர வேண்டும், காய மடைந்தவர்களின் மருத்துவ செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

காய மடைந்தவர்கள் பணிக்கு திரும்பும் வரையில் அவர்களுக்கான உதவி களை செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுள்ளது. பணிமனைகளில் தொழிலாளர் களின் பாதுகாப்புக்கு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என்றார். இந்நிலையில் பணியா ளர்கள் சார்பில், விபத்தில் இறந்த ஊழியர்களுக்கு பணிமனையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி

போக்குவரத்து துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த 2 ஊழியர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வடபழனி பணிமனையில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கிடைப்பதற்கும் ஆவன செய்யப்படும்.

போக்குவரத்து பணிமனைகள் மற்றும் பணியாளர்கள் தங்கும் அறைகள் குறித்து உரிய ஆய்வும், பாதுகாப்பு தணிக்கையும் மேற்கொள்ளுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 32 பணிமனைகளில், 16 பணிமனைகள் முதல் கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன. மேலும், 74 புதிய பணிமனைகள் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலமாக அமைக்கப்பட்டு,

அனைத்து பணிமனைகளும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்கின்ற வகையில் மேம்படுத்தப்படும். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள உயர் நிலை குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனிவரும் காலங்களில் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in