Published : 29 Jul 2019 10:00 AM
Last Updated : 29 Jul 2019 10:00 AM

தமிழகத்தில் மீண்டும் பரவும் ‘தொண்டை அடைப்பான் நோய்’ குழந்தைகளுக்கு 15 வயது வரை கண்டிப்பாக தடுப்பூசிகளை போட வேண்டும்: சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி அறிவுறுத்தல்

சென்னை

குழந்தை பிறந்த ஒன்றரை மாதத்தில் இருந்து 15 வயது வரை தொண்டை அடைப்பான் நோய் தடுப்பூசியை கண்டிப்பாக போட வேண்டும் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

தமிழகத்தில் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தாக்கும் ‘தொண்டை அடைப்பான் நோய் (டிப்தீரியா)' பரவத் தொடங் கியுள்ளது. இந்நோய் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், கால் நூற்றாண்டுக்குப் பின்னர் அந்நோய் மீண்டும் பரவி வரு கிறது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதி களில் கடந்த 2 மாதங்களில் மட் டும் 7 குழந்தைகள் தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். நோயின் தீவிரத்தால் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை (டிபிஎச்) இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் தொண்டை அடைப் பான் நோயைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக் கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நோய் பாதிப்புள்ள தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர் பகுதி களில் மருத்துவக் குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதிகளில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந் தைகளுக்கு தொண்டை அடைப் பான் நோய்க்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதனால், தொண்டை அடைப்பான் நோயைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்.

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதத்தில் ஐந்து நோய் தடுப்பூசி (தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல், நிமோனியா, மஞ்சள் காமாலை) போட வேண்டும்.

அடுத்ததாக குழந்தைகளுக்கு 16 மாதத்தில் இருந்து 24 மாதத்துக்குள் மூன்று நோய் தடுப்பூசிகள் (தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல்) போட வேண்டும். முடிந்தவரை 16-வது மாதத்தில் போடுவது நல்லது. இதையடுத்து 5 வயதில் குழந்தை 1-வது படிக்கும் போது இரண்டாவது மூன்றுநோய் தடுப் பூசி போட வேண்டும்.

இங்குதான் பிரச்சினை எழுகிறது. குழந்தை வளர்ந்துவிட்டதால் தடுப்பூசி போடுவதில்லை. இதைத் தொடர்ந்து 10 வயது, 15 வயதில் இருநோய் தடுப்பூசி (தொண்டை அடைப்பான், ரண ஜென்னி) போட வேண்டும்.

குழந்தைகள் வளர்ந்துவிட்டால் பெற்றோர்கள் தடுப்பூசிகளைப் போடுவதில்லை. இதனால், குழந் தைகளுக்குநோய் எதிர்ப்பு சக்தி குறைந்து தொண்டை அடைப்பான் உள்ளிட்ட பலவேறு நோய்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் பெற்றோர் அலட்சியம் காட்டக் கூடாது.

கர்ப்பிணிகளும் இந்த இருநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தொண்டை வலி, காய்ச்சல் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற வேண்டும்.

தொண்டை அடைப்பான் நோய்க்கு தேவையான பென் சிலின், எரித்ரோமைசின், ஆன்டி டிப்தீரியா சீரம் மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் தேவை யான அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளதன. வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் வரும் தடுப்பூசி குறித்த வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.

இவ்வாறு டாக்டர் க.குழந்தை சாமி தெரிவித்தார்.

- சி.கண்ணன் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x