Published : 29 Jul 2019 08:55 AM
Last Updated : 29 Jul 2019 08:55 AM

பெட்ரோல், டீசல் வாகனங்களின் பதிவு, புதுப்பிப்பு கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்

சென்னை

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்ட ணத்தை பன்மடங்கு உயர்த்தும் மத்திய அரசின் முடிவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து பேட்டரியில் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித் துள்ளது.

பேட்டரியில் இயங்கும் வாக னங்கள் தற்போது அறிமுக நிலை யில்தான் உள்ளன. இத்தகைய வாகனங்கள் முழு பயன்பாட்டுக்கு வரும்போது அதனால் மிகப்பெரும் பயன் கிடைக்கும் என்ற நிலை உருவானால், பொதுமக்கள் தாங்களாகவே பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவதற்கு மாற்றாக பேட்டரி வாகனங்களை வாங்குவதற்கு முன்வருவார்கள்.

பேட்டரி வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு வரி குறைப்பு உள்ளிட்ட சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் சலுகைகளை அறிவித்து ஊக்கு விப்பது தவறல்ல.

ஆனால், பெட்ரோல், டீசல் வாகனம் வாங்குவோரையும், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் களையும் தண்டிக்கும் வகையில் வாகனங்களைப் பதிவு செய்யவும் புதுப்பிக்கவும் ரூ.1,000 முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணத்தை உயர்த்துவது தண்டனை தருவ தாகும். கட்டணங்களை பன்மடங்கு உயர்த்தியிருப்பது கண்டனத்துக் குரியது.

இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

- இரா.முத்தரசன் வலியுறுத்தல்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x