துணைவேந்தர், பதிவாளர் இல்லாமல் இயங்கிவரும் கல்வியியல் பல்கலைக்கழகம் நிர்வாகப் பணிகள் முடங்கி கிடப்பதாக புகார்
சென்னை
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் நீண்ட கால மாக துணைவேந்தர் மற்றும் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பதவிகள் காலியாக இருப்பதால், பல்கலைக்கழக அன் றாட நிர்வாகப்பணிகள் முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், ஆசிரியர் கல்வி யியல் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வும் கடந்த 2008-ம் ஆண்டு சென் னையில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி லேடி வெலிங் டன் கல்வியியல் மேம்பாட்டு நிறு வன வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த இப்பல்கலைக் கழகம், தற்போது பழைய மகா பலிபுரம் சாலையில் உள்ள காரப் பாக்கத்தில் நிரந்தர கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதன்கீழ் 600-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
ஆசிரியர் கல்வியியல் பல் கலைக்கழகத்தின் துணைவேந்த ராக பணியாற்றி வந்த ஜி.தங்க சாமியின் பதவிக்காலம் கடந்த பிப்ரவரியில் முடிவடைந்தது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாமல் கடந்த 5 மாதங்களாக துணைவேந் தர் பதவி காலியாக உள்ளது அதற்கும் மேலாக, பல்கலைக்கழக நிர்வாகத்தில் முக்கிய பதவிகளில் ஒன்றான பதிவாளர் பணியிடம் கடந்த 2 ஆண்டுகளாகவும், அதோடு தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பணியிடம் கடந்த 2 மாதங்களாகவும் காலியாக இருக்கின்றன. மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு அலு வலர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது வி.பாலகிருஷ்ணன் பொறுப்பு பதிவாளராகவும், எம். கோவிந்தன் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராகவும் இருந்து வருகிறார் கள். நிர்வாக பதவிகளை கூடுதல் பொறுப்பாக வகிப்பதால் பேராசிரி யர்களுக்கு கூடுதல் பணிப்பளு ஏற்பட்டுள்ளது. இதனால் பல் கலைக்கழக நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாணவர் நலன் கருதி...
துணைவேந்தர் இல்லாததாலும், முழுநேர பதிவாளர் மற்றும் முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அலுவ லர் இல்லாததாலும் பல்கலைக் கழக நிர்வாகத்தில் பொறுப்பு அதி காரிகளால் முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. அங்கீகாரம் வழங்கும் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, பிஎட்,. எம்எட் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பல்கலைக்கழகத்தின் நிர்வாக பணிகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக துணைவேந் தரையும் முழுநேர பதிவாளர் மற் றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவல ரையும் நியமிக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் கோரிக்கை.
