

சென்னை
சென்னை மாநகராட்சி சார்பில் போரூர் ஏரியில் நடைபெற்ற உடற்பயிற்சி மூலம் மாநகரை தூய்மைப்படுத்தும் விழிப்புணர்வு ஓட்ட நிகழ்ச்சியில், ஏரியில் இருந்து மொத்தம் 3.5 டன் குப்பைகள் நேற்று அகற்றப்பட்டன.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சீரான ஓட்டப் பயிற்சி மேற் கொள்ளும்போதே இடையி டையே நின்று, குனிந்து, உட் கார்ந்து கோணிப்பையில் குப்பை களை சேகரிக்கும் ஓர் உடற்பயிற்சி முறை ‘பிளாக்கிங் (Plogging)’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புதுமையான குப்பை அள்ளும் விழிப்புணர்வு பயிற்சி கடந்த 2016-ம் ஆண்டு ஸ்வீடன் நாட்டில் தொடங்கப்பட்டது. இது உலக அள வில் பிரபலமடைந்து வருகிறது. இதை சென்னை மாநகராட்சி பகுதியிலும் மாதம் ஒருமுறை பொதுமக்கள் இயக்கமாக நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி சார்பில், தன்னார்வலர் களுடன் இணைந்து, ‘சென்னை பிளாக்கிக் சவால் - 2019’ நிகழ்ச்சி கடந்த 14-ம் தேதி பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் தொடங்கி யது.
இதைத் தொடர்ந்து போரூர் ஏரியில் உடற்பயிற்சி மூலம் குப்பைகளை அகற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி துணை ஆணைர் (சுகாதாரம்) ப.மதுசூதன் ரெட்டி பங்கேற்று, குப்பை அகற்றும் பணியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மொத்தம் 612 தன்னார்வலர்கள் பங்கேற்று, சுமார் 3.5 டன் குப்பைகளை சேகரித் தனர். நிகழ்ச்சியில் மாநகாட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், மண்டல அலுவலர் சசிகலா ஆகியோர் கலந்துகொண்டனர்.