மும்பை கனமழை: 3 விரைவு ரயில்கள் ரத்து

மும்பை கனமழை: 3 விரைவு ரயில்கள் ரத்து
Updated on
1 min read

சென்னை

மும்பையில் பெய்து வரும் கனமழையால் 3 விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தாதர் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலின் (12163) கடந்த 27-ம் தேதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை எழும்பூர் - சேலம் விரைவு ரயிலின் (22153) 28-ம் தேதி (நேற்று) சேவை ரத்து செய்யப்படுகிறது. சேலம் - சென்னை எழும்பூர் (22154) 29-ம் தேதி (இன்று) சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in