Published : 29 Jul 2019 07:33 AM
Last Updated : 29 Jul 2019 07:33 AM

திருட்டு, வழிப்பறி, ரவுடிகளை கட்டுப்படுத்த காவல் துறை வியூகம்: தவறி விழுந்து கைகளை முறித்துக் கொள்ளும் குற்றவாளிகள் - மனிதாபிமானம் பார்த்தால் அநீதி என போலீஸார் கருத்து

கோப்புப் படம்

குற்றவாளிகள் பலர் தவறி விழுந்து கைகளை முறித்துக் கொள்ளும் நிலையில் திருட்டு, வழிப்பறி, ரவுடிகளை கட்டுப்படுத்த போலீஸார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் செயின் பறிப்பு, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. 1.1.2019 முதல் 30.4.2019 வரை மட்டும் 82 செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக தனியாக நடந்து செல்லும் பெண்கள், முதியவர்களை குறி வைத்து நடத்தப்படும் செயின் பறிப்புகள் பாதிக்கப்பட்டவர்களை நிலை குலைய வைத்து விடுகின்றன.

அதில், இருந்து அவ்வளவு எளிதில் பாதிக்கப்பட்டவர்களால் மீண்டு வர முடிவதில்லை. இயல்பு நிலைக்குத் திரும்ப பல மாதங்கள் வரை பிடிக்கிறது என நகை, பணத்தைப் பறி கொடுத்தவர்கள் தங்களது வேதனையை தெரிவித்துள்ளனர்.

சிறுகச் சிறுக சேமித்த பணத்தை மூலதனமாக்கி மீதமுள்ள பணத் துக்கு வங்கிக் கடன் பெற்று ஆசை ஆசையாகவும், அத்தியா வசியமாகவும், நிர்பந்தத்தின் பேரிலும் வாங்கப்படும் இரு சக்கர வாகனங்கள், கார்களை கண் இமைக்கும் நேரத்துக்குள் திருடிச் சென்று விடுகின்றனர். ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாகனங்கள் திருடப்படும்போது அவர்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டு விடுகிறது.

பல ஆண்டு உழைப்பில் வாங்கிய பொருட்களைப் பறி கொடுத்தவர்களின் வாழ்க்கைத் தரம் மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. தாங்கள் இழந்ததை அடைவதற்கு, அவர்கள் மீண்டும் பல ஆண்டுகள் உழைக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் கஷ்டங்கள் எதுவுமே இல்லாமல் சுகபோக வாழ்க்கையை வாழ் கிறார்கள் திருடனும், கொள்ளைக் காரனும்.

பல ஆண்டு ஓடிவிடும்

இவர்களைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்களை நிரூபித்து, தண் டனை கிடைப்பதற்குள் பல ஆண்டு கள் ஓடி விடும். அதற்குள் அந்தக் குற்றவாளி ஜாமீனில் வெளிவந்து மீண்டும் பல குற்றங்களைச் செய்திருப்பான். பாதிக்கப்பட்டவருக்கு எந்த நீதியும் கிடைப்பதில்லை. இதில் வேலை செய்த போலீஸாருக்கும் பயனில்லாமல் போய்விடுகிறது. ரவுடியிசத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கும் இதே நிலைதான்.

கடும் தண்டனை வேண்டும்

இதுபோன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் குற்றவாளிகள் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டிய வர்கள் என தனது காரைப் பறி கொடுத்த சென்னையைச் சேர்ந்த ஜோசப் (35) என்பவர் தெரிவித் துள்ளார். ஆனால், பல நேரங்களில் குற்றவாளிகள் பிடிபடுவது இல்லை. தற்போது பிடிபடும் குற்ற வாளிகள் காவல் நிலையத்தின் குளியல் அறையில் அல்லது காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தவறி விழுந்து கையை உடைத்துக் கொள் கின்றனர்.

அச்சத்தை ஏற்படுத்தும்

இதுவரை சுமார் 50 பேருக்கு இதுபோல் நிகழ்ந்துள்ளதாக கூறப் படுகிறது. உண்மையான குற்ற வாளிகளுக்கு கடவுளே தண்டனை கொடுத்து விட்டார் என பாதிக் கப்பட்டவர்கள் ஓரளவு நிம்மதி அடைகின்றனர். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கை உடைப்பு தண்டனை கிடைக்கும் என்ற அச்சமும் ஏற்படுகின்றது. அடுத்த குற்றவாளி உருவாகாமல் இது தடுக்கிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கள் கூறும்போது, “பிடிபடும் குற்ற வாளிகளைக் கைது செய்து நீதிமன்றம் மூலம் சிறையில் அடைத்து வருகிறோம். ஆனால், சிலர் தொடர்ந்து கைவரிசை காட்டுகின்றனர். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காக மனிதாபிமானமற்ற முறையில் கொடூரக் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற கொடூரர்களிடம் மனிதாபிமானம் பார்த்தால் அது நல்லவர்களுக்கு செய்யும் அநீதியே” என்றனர்.

குற்றவாளிகளுக்கு ஆதரவு

போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களின் கைகள் முறி வதற்கு சிலர் எதிர்ப்பு தெரி விக்கின்றனர். “குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசும் நபர்கள், பாதிக் கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட வலியையும், நஷ்டத்தையும் உணர் வதில்லை. பாதிக்கப்பட்டவர் களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும், வலியையும் சரிசெய்து விட்டு குற்றவாளிகளுக்கு ஆதரவாக எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் பேசிக் கொள்ளலாம்” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

எழும்பூரைச் சேர்ந்த சுகந்தி (35) கூறும்போது, “நல்லவர்கள் பாதிக்கப்படக் கூடாது. குற்றச் செயல்களில் ஈடுபடுவர்கள் தப்பித்து விடக்கூடாது. சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.

இதற்கிடையே போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பவர்களின் கைகள் முறிவதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x