புலம்பித் தீர்க்கும் புலவராகத்தான் ஸ்டாலினைப் பார்க்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமார்

புலம்பித் தீர்க்கும் புலவராகத்தான் ஸ்டாலினைப் பார்க்கிறேன்: அமைச்சர் ஜெயக்குமார்
Updated on
1 min read

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். 

கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தனர். அப்போது தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பினார்:

“சட்டமன்றத்தில் அம்மாவினுடைய ஆட்சி தொடரும் என்ற அடிப்படையில்தான் மக்களுடைய எண்ணமும் உள்ளது. ஆகவே மக்கள் வாக்களித்தது அம்மா ஆட்சி தொடரணும் என்றுதான்.

இது புரியாத புலம்பித் தீர்க்கற ஒரு புலவராகத்தான் நான் ஸ்டாலினைப் பார்க்கிறேன். அதுவும் குறிப்பாக இப்போது கணக்கு என்ன சொன்னார் என்றால் 13 பெரிதா 9 பெரிதா என்கிறார். 

நான் என்ன கேட்கிறேன் என்றால் 122 பெரியதா 100 பெரியதா? இதுதான் இப்போது என் கேள்வி” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in