தகுதியிருந்தும் புதுச்சேரி இளையோருக்கு கல்லூரி பேராசிரியர்கள் பணியிடம் மறுப்பு: வட மாநிலத்தவர் நியமனத்தால் தவிக்கும் கல்லூரி மாணவர்கள்

தகுதியிருந்தும் புதுச்சேரி இளையோருக்கு கல்லூரி பேராசிரியர்கள் பணியிடம் மறுப்பு: வட மாநிலத்தவர் நியமனத்தால் தவிக்கும் கல்லூரி மாணவர்கள்
Updated on
2 min read

தகுதியிருந்தும் கல்லூரி பேராசிரியர் பணியிடங்கள் மறுக்கப்படும் நிலையில் புதுச்சேரி இளையோர் உள்ளனர். பிராந்திய மொழி தெரியாத வடமாநிலத் தவரை நியமிப்பதை தவிர்த்து, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை புதுச்சேரி அரசு உறுதிப்படுத்துமா என்று கேள்வி எழுந்துள்ளது. 100 பணியிடங்கள் வரை இதில் பறிபோய் உள்ளதாக சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான 8 கலை அறிவியல் கல்லூரிகளும் 3 பட்ட மேற்படிப்பு மையங்களும் உள்ளன. இதில் 150க்கும் அதிகமான பேராசிரியர் களுக்கான பணியிடங்கள் பூர்த்தி செய் யப்படாத நிலையில் 28 பாடப்பிரிவு களில் சுமார் 14 ஆயிரம் மாணவ, மாண வியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

பேராசிரியர் பணியிடங்களுக்காக கடந்த 2018 - 19 ம் கல்வி ஆண்டில் புதுச்சேரியை சேர்ந்த 59 உதவிப் பேராசிரியர்கள் பல்கலைக்கழக மானி யம் (யூஜிசி) கூறக்கூடிய தகுதி அடிப் படை இருந்தும் மிக குறைவான ஊதியத் துக்கு (ரூ 10 ஆயிரம்) கௌரவ விரிவுரை யாளர்களாக நியமனம் செய்யப்பட் டனர். திடீரென இந்த ஒப்பந்த ஆசிரியர் களுக்கும் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அத் துடன் உள்ளூர் இளைஞர்கள் பணி மறுக் கப்படுவதுடன் கல்லூரிகளில் பிராந்திய மொழி தெரியாத வட மாநிலத்தவர்கள் அதிகளவில் மத்திய தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி அரசு இதில் மவுனமாகவே உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் நாராயண சாமியிடம் மனு அளித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கம் கூறியதாவது:

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பணி மறுக்கப்பட்ட உதவி பேராசிரியர்களுக்கு கருணை அடிப் படையில் மீண்டும் பணி தர வேண்டும். நியாயமான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள 4 மாத ஊதியத்தை உடனே வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளோம்.

புதுச்சேரியில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களுக்கு தேவையான தகுதி வாய்ந்த பட்டதாரி இளைஞர்கள் புதுச்சேரியிலேயே உள்ளனர். அரசு கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உதாரணமாக, கடந்தாண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு மத்திய தேர்வாணையம் மூலமாக 102 பேராசிரியர்கள் நியமனம் செய்யப் பட்டனர். இவர்களில் இரண்டு ஆசிரி யர்கள் மட்டுமே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற அனைவரும் தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். இதன்மூலம் புதுச்சேரி இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய 100 பணியிடங்கள் பறி போயுள்ளது.

இதற்கு மத்திய தேர்வாணையத்தை காரணம் காட்டுவது பொருத்தமா னதாக இல்லை. 1996இல் நடைமுறைப் படுத்தப்பட்ட பணி நியமன விதி அடிப் படையில் தமிழ் உள்ளிட்ட புதுச்சேரி பிராந்திய மொழி தெரிந்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க முடியும் என்று இருந்ததை தற்போது நடை முறைப்படுத்தி இருந்தாலே பெரும் பாலான இடங்கள் புதுச்சேரி சேர்ந்தவர் களுக்கு வேலைவாய்ப்பு கிடைத் திருக்கும்.

புதுச்சேரியில் பேராசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த முனைவர் பட்டம் பெற்ற 600 க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். புதுச்சேரி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை மத்திய தேர்வாணையத்திற்கு தாரை வார்ப்பது புதுச்சேரி இளைஞர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே புதுச்சேரி அரசு புதுச்சேரிக்கு என்று தனி பணி தேர்வாணையம் ஏற்படுத்த வேண்டும். அதுவரை புதுச்சேரி அரசாங்கமே முடிவு செய்து இம்மாநிலத்தை சேர்ந் தவர்களுக்கு பேராசிரியர் பணி உள்ளிட்ட பணியிடங்கள் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம் புதுச்சேரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதோடு மாணவர் களின் கல்வித்தரம் உயரும் என்று முதல்வரிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளோம்" என்றார்.

தமிழ் மொழி தெரியாத ஆசிரியர் களிடம் கற்பது தொடர்பாக மாணவர் கள் தரப்பில் விசாரித்தபோது, "தமிழ் மொழி தெரியாத ஆசிரியர்களிடம் கல்வி கற்பதில் பல சிரமங்களை சந்திக்கிறோம். எங்கள் அவலத்தை யாரும் உணர்வதே இல்லை.

அரசு கலைக் கல்லூரிகளில் படிக்கும் பலரும் ஏழ்மையான குடும் பத்தை சேர்ந்தவர்களாகவே உள்ளோம். பலரும் பிளஸ் 2 வரை தமிழ் மொழியில் படித்தவர்களாகவே உள்ளோம். எப்படி யாவது உயர்கல்வி படிக்கவே கல்லூ ரிக்கு ஆர்வத்துடன் வந்தோம். தற்போது இங்கு தமிழ் மொழியே தெரியாத பெரும்பாலும் இந்தி மட்டுமே பேசக் கூடிய, ஓரளவு ஆங்கிலம் பேசும் வட இந்திய ஆசிரியர்கள் பாடம் நடத்து வதால் கல்லூரி படிப்பு பாதிக்கப்பட்டு வருகிறது" என்று ஆதங்கத்துடன் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in