காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் 27 நாட்களில் 35 லட்சம் பக்தர்கள் தரிசனம்: நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்த போலீஸார்

அத்திவரதர் தரிசனத்தில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் அமைத்து பின்னர் பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.
அத்திவரதர் தரிசனத்தில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க தடுப்புகள் அமைத்து பின்னர் பக்தர்கள் வரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.
Updated on
1 min read

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழாவில் நேற்று தமிழகம் முழுவதும் இருந் தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண் டனர்.

இதனால் அத்திவரதரை தரிசிக்க 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர். கோயிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்படு வதை தடுக்க தடுப்புகள் அமைத்து போலீஸார் கண்காணித்தனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் விழா ஜூலை 1-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 27 நாட்களில் 35 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் நேற்று நீல நிறப் பட்டாடை அணிந்து பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத் திருந்து தரிசனம் செய்தனர். வழக்க மாக வரும் பக்தர்களின் எண்ணிக் கையைவிட நேற்று சனிக்கிழமை என்ப தால் பக்கதர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அத்திவரதரை தரிசிக்க 8 மணி நேரம் வரை ஆனதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க தடுப்புகள் அமைத்து பக்தர்களை போலீஸார் அனுமதித்தனர். அப்படி இருந்தும் பல்வேறு இடங்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஆட்டோக்கள் கட்டணம் உயர்வு

அத்திவரதர் விழாவையொட்டி ஆட்டோ கட்டணம் அதிகரிக்கப்பட் டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் இருந்து வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு கோபுரம் செல்வதற்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கின்றனர்.

இதேபோல் அருகில் உள்ள பகுதி களுக்குக்கூட அதிக கட்டணம் வசூ லிக்கின்றனர்.

கிழக்கு கோபுரம் அருகே சாலை யோரம் ஏராளமான மிதியடி காப் பகங்கள் உருவாகி, அதிக அளவில் கட்டணம் வசூலிக்கின்றன. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின் றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in