டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசி நாள்

டிப்ளமோ நர்ஸிங் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: ஆகஸ்ட் 4-ம் தேதி கடைசி நாள்
Updated on
1 min read

டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 5 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் அரசு செவிலியர் பள்ளிகள் செயல் படுகின்றன. இந்த செவிலியர் பள்ளிகளில் 2 ஆயிரம் டிப்ளமோ நர்ஸிங் இடங்கள் உள்ளன. இந்நிலையில் அரசு செவிலியர் பள்ளிகளில் 2015 - 2016-ம் கல்வி ஆண்டிற்கு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப விற்பனை 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 9 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. வரும் 22-ம் தேதி முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெற உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வரும் ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் ‘செயலாளர், தேர்வுக் குழு, எண்.162, ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600010’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பத்தை நேரில் பெறுபவர்கள், அந்தந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லது தலைமை மருத்துவ மனை இணை இயக்குநருக்கு விண்ணப்ப மனுவுடன் சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ.250-க்கான கேட்பு வரைவோலையை (டிடி) சமர்ப்பித்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவது ஒரு வங்கியில் ‘செயலாளர், தேர்வுக் குழு’ என்ற பெயரில் வரை வோலை எடுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப் பட்டோர் (அருந்ததியர்) மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் சாதி சான்றிதழின் 2 நகல்களை சமர்ப்பித்து விண்ணப் பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஏட்டை www.tnhealth.org மற்றும் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள் ளலாம். பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவிகள் மட்டுமே டிப்ளமோ நர்ஸிங் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in