

ஏர்வாடி தர்கா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது வலியுல் லாஹ் தர்கா 845-ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஜூலை 4-ம் தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தர்கா வளாகத் தில் ஜூலை 13 மாலை அடி மரம் ஏற்றப்பட்டது. ஜூலை 14 மாலை 4 மணியளவில் மேள, தாளம் முழங்க யானை, குதிரை முன் செல்ல கொடி ஊர்வலம் தொடங்கி, இரவு 7.40 மணியளவில் கொடியேற்றப்பட் டது. ஜூலை 25-ம் தேதி வரை தினமும் மவுலீது நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான உரூஸ் எனும் சந்தனக் கூடு திருவிழா ஜூலை 26-ம் தேதி மாலை தொடங் கியது. குதிரைகள் நடனத்துடன், அலங்கரிக்கப்பட்ட யானை ஊர்வ லத்துடன், வாண வேடிக்கைக ளுடன் ஏர்வாடி முஜாபிர் நல்ல இபுறாகீம் மஹாலில் மத நல் லிணக்க சந்தனக் கூடு ஊர்வலம் நேற்று அதிகாலை 3 மணிக்கு தொடங்கி, 5.30 மணிக்கு தர்காவை அடைந்தது.
அதையடுத்து மக்பராவில் புனித சந்தனம் தர்கா ஹக்தார் பொது மகா சபை நிர்வாகிகளால் பூசப்பட்டது. ஆக.2-ம் தேதி மாலை 5 மணிய ளவில் கொடியிறக்கப்பட்டு, இரவு 7 மணி முதல் பக்தர்களுக்கு தப்ரூக் எனும் பிரசாதம் வழங்கப்பட்டு விழா நிறைவடையும்.
இவ்விழாவில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் மற்றும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம், இந்து, கிறிஸ்தவர் என பல்வேறு சமூகத்தினர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, 700-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.