Published : 28 Jul 2019 11:19 AM
Last Updated : 28 Jul 2019 11:19 AM

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ்நாட்டில் விரைவில் ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். காட்பாடி அருகேயுள்ள லத்தேரி பேருந்து நிலையத்தில் வேனில் இருந்தபடி ஸ்டாலின் பேசும்போது, ‘‘இந்தத் தேர்தல் ஏப்ரல் மாதமே முடிந்திருக்க வேண்டியது. சிலர் செய்த சதியால் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏப்ரல் மாதமே தேர்தல் நடந்திருந்தால் கதிர்ஆனந்த் மிகப்பெரிய வாக்கு கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருப்பார்.

திமுக மீது ஒரு களங்கத்தை சுமத்தி அரசியல் லாபம் தேடலாம் என்று திட்டமிட்டு சதி செய்து தேர்தலை நிறுத்தினார்கள். தேர்த லுக்கு முந்தைய நாள் தூத்துக் குடியில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தினர். மத்திய, மாநில அரசுகள் தேர்தல் ஆணை யத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டு சதி செய்தனர்.

அதை நாம் முறியடித்து ஒவ் வொரு தொகுதியிலும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத் திருக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக திமுக அமர்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் எந்தெந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற ஆய்வில் திமுகதான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இப்போது, நடைபெறும் தேர்த லில் நிறுத்தப்பட்டுள்ள எதிர் தரப்பு வேட்பாளர் வெற்றி பெற்றால் ‘பத்தோடு பதினொன்று, அத்தோடு இதொன்னு’ என்ற பழமொழிக்கு ஏற்ப அடிமையாக இருப்பார்.

தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் நாம் வெற்றிபெற்றது 13, அதிமுக பெற்றது 9 தொகுதிகள். தமிழ கத்தை பொறுத்தவரை எங்கள் ஆட்சிதான் தொடர வேண்டும் என்ப தற்காக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம் என அதிமுக வினர் கூறி வருகின்றனர். கருணாநிதி மறைந்ததால் நடந்த இடைத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மீதமுள்ள 12 தொகுதிகளில் அதிமுகவிடம் இருந்து நாம் வெற் றியை பறித்ததால் இந்தத் தேர்த லில் நாம்தான் வெற்றி பெற்றிருக் கிறோம். விரைவில் தமிழ்நாட் டில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. அதில் எந்த மாற்றமும் கிடையாது.

மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களவையில் முதன்முதலில் குரல் எழுப்புகிற இயக்கமாக திமுக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x