கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் பேருந்துகள்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கொழுந்துவிட்டு எரியும் பேருந்துகள்.
Updated on
1 min read

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்து நிலையத்தில் நேற்று தீவிபத்து ஏற்பட்டது.

சென்னை கோயம்பேடு தனி யார் ஆம்னி பேருந்து நிலையத்தி லிருந்து தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்க ளுக்கு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இங்கு தனியார் டிரா வல்ஸ் நிறுவனத்துக்கு சொந்த மான ஒரு பேருந்து கடந்த 6 மாதங் களாக இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேருந் தின் அருகே 2 ஆம்னி பேருந்து கள் நிறுத்தப்பட்டிருந்தன.

கரும்புகை வெளியேறியது

இந்நிலையில் 6 மாதங்களாக நிறுத்தப்பட்டிந்த பேருந்தில் இருந்து நேற்று மாலை 4.15 மணியளவில் திடீரென கரும் புகை வந்தது. சிறிது நேரத்தில் அந்த பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அங்கிருந் தவர்கள் தீயை அணைக்க முயன் றனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. மேலும் அருகே இருந்த இரு பேருந்து களுக்கும் தீ பரவியது.

தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 வாகனங் களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்க முயன் றனர். 45 நிமிட போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக் கப்பட்டது.

இந்த தீ விபத்தில் 3 பேருந்து கள் சேதமடைந்தன. இச்சம்பவத் தால் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து குறித்து சிஎம்பிடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in