

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தாம்பரத்தில் இருந்து வரும் ஆகஸ்ட் 9, 30 மற்றும் செப்டம்பர் 6-ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில்(82615) மறுநாள் காலை 10 மணிக்கு திருநெல்வேலிக்கு செல்லும். விழுப்புரத்தில் இருந்து வரும் 31-ம் தேதி முதல் செப்டம் பர் 25-ம் தேதி வரை புதன் கிழமைகளில் மட்டும் (9 சர்வீஸ் கள்) மாலை 4 மணிக்கு புறப் படும் சிறப்பு கட்டண ரயில் (06043) மறுநாள் காலை 8.25 மணிக்கு செகந்திராபாத் செல்லும்.
இதேபோல், செகந்திராபாத் தில் இருந்து வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 26-ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் மட்டும் (9 சர்வீஸ்கள்) இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06044) மறுநாள் மதியம் 2 மணிக்கு விழுப்புரம் செல்லும். இந்த சிறப்பு ரயில்கள் செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், சூலூர்பேட்டை, கூடூர் வழியாக இயக்கப்படும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (28-ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.