

கால்நடை மருத்துவ படிப்புகளுக் கான முதல்கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. பி.டெக் கோழி யின தொழில்நுட்ப படிப்பில் 9 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), பால்வளத் தொழில் நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்), கோழி யின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (பி.டெக்) உள்ளன.
கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புகளுக்கு 360 இடங்களில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 54 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 306 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. பி.டெக் படிப்புகளுக்கு மொத்தம் 100 இடங் கள் உள்ளன. இதில் உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 40 இடங் களில் 6 இடங்கள் (15 சதவீதம்) இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2019 - 20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 25-ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை சிறப்பு பிரிவினர்களுக்கும், பகல் 11.30 மணி முதல் மாலை 5 மணி வரை பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கும் (தொழில் கல்வி) கலந்தாய்வு நடைபெற்றது.
இதையடுத்து, 26-ம் தேதி பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புக்கு (கலையியல் பிரிவு) நடைபெற்ற கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. தரவரிசைப் பட்டியலில் முதல் 15 இடங்களை பிடித்தவர்களுக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கல்லூரிகளில் சேர்வதற்கான அனுமதிக் கடிதத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்தது.
இதுதொடர்பாக மாணவர் சேர்க்கைக்குழுத் தலைவர் கே.என்.செல்வகுமார் கூறியதாவது:
கால்நடை மருத்துவப் படிப்பு களுக்கான முதல்கட்ட கலந் தாய்வின் முடிவில் பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் படிப்புகளுக்கான 306 இடங்கள் மற்றும் பால்வளத் தொழில்நுட்ப படிப்புக்கான 40 இடங்கள் (பி.டெக்) மற்றும் உணவுத் தொழில்நுட்ப படிப்புக் கான (பி.டெக்) 34 இடங்கள் நிரம்பியுள்ளன.
கோழியின தொழில்நுட்ப படிப்புக்கான (பி.டெக்) 20 இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 5 இடங்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 4 இடங்கள் நிரம்பவில்லை.
அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும்
முதல்கட்ட கலந்தாய்வு இன்று டன் நிறைவடைகிறது. காலியாக உள்ள கோழியின தொழில்நுட்ப படிப்புக்கான (பி.டெக்) 9 இடங் கள், கல்லூரிகளில் மாணவர் கள் சேராததால் ஏற்படும் காலியிடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்ப ஒப்படைக்கப்படும் இடங் கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.