

சென்னை காசிமேடு துறை முகத்தில் நேற்று அதிகாலை ராட்சத திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. 2 டன் எடைகொண்ட அந்த திமிங்கலம் 6 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்டதாக இருந்தது. திமிங்கலம் கரை ஒதுங் கிய தகவலை அறிந்து ஏராள மானோர் அதைப் பார்க்க திரண்டனர்.
இதுபற்றி மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீன் வளத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, வனத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிரேன் உதவியுடன் ராட்சத திமிங்கலத்தை மணல் பரப்புக்கு கொண்டு வர முயன்றனர்.
திமிங்கலத்தின் எடை அதிகமாக இருந்ததால் கிரேன் மணல் பரப்பில் புதைந்தது. இதைத் தொடர்ந்து, மற்றொரு கிரேன் வரவழைக்கப்பட்டு மணலில் புதைந்த கிரேன் மீட்கப்பட்டது. இதற்கிடையே, பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் பரப்பில் 20 அடி ஆழம் 6 அடி அகலத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கிரேன் மூலம் ராட்சத திமிங்கலம் புதைக் கப்பட்டது.
ராட்சத திமிங்கலம் கரை ஒதுங் கியதற்கான காரணம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின் றனர்.