பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் எஸ்பி, டிஎஸ்பி உட்பட 6 பேர்

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரம்: காத்திருப்போர் பட்டியலில் எஸ்பி, டிஎஸ்பி உட்பட 6 பேர்
Updated on
1 min read

பார் உரிமையாளர் தற்கொலை விவகாரத்தில் கூடுதல் எஸ்.பி., டிஎஸ்பி உட்பட 6 பேரை காத் திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.

திருப்போரூரில் உள்ள டாஸ் மாக் கடை அருகே நெல்லையப் பன் (36) என்பவர் அனுமதி யின்றி பார் நடத்தி வந்தார்.

இந்நிலையில், ‘அனுமதி யின்றி பார் நடத்துவதற்கு டாஸ்மாக் நிர்வாகமும், போலீ ஸாரும் அதிக லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர். இதனால் கடன் அதிகமாகி நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்று செல்ஃபி வீடியோ எடுத்த நெல்லையப் பன், கடந்த மே 28-ம் தேதி மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவல கத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது.

இந்த தற்கொலை வழக் கில் தொடர்பு உள்ளதாக காஞ்சிபுரம் கூடுதல் எஸ்பி. மாணிக்கவேல், மாமல்லபுரம் டிஎஸ்பி சுப்புராஜு, ஆய்வா ளர்கள் ரவிச்சந்திரன் (காஞ்சி புரம்), கண்ணன் (திருப்போ ரூர்), பாண்டி (கேளம்பாக் கம்), சிரஞ்சீவி (மாமல்லபுரம்) ஆரோக்கியராஜ் (மதுராந்தகம் மது விலக்கு) உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காவல் துறை அதிகாரிகள் 7 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் கடந்த 20-ம் தேதி திடீர் சோதனை நடத்தி அவர் கள் மீது வழக்கு பதிவு செய்த னர். இந்நிலையில், கூடுதல் எஸ்பி. மாணிக்கவேல், டிஎஸ்பி சுப்புராஜு, ஆய்வாளர்கள் ரவிச் சந்திரன், கண்ணன், பாண்டி, சிரஞ்சீவி ஆகிய 6 பேரை காத்தி ருப்போர் பட்டியலுக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in