

அரசு போக்குவரத்து கழகங்களில் 350 புதிய பேருந்துகள் விரைவில் இணைக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் தினமும் 21 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பழைய பேருந்துகள் ஆகும். பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் இந்த பேருந்துகளில் இருக்கைகள், கண்ணாடிகள் உடைந்து காணப்படுகின்றன. இதே போல் சில வழித்தடங்களில் தானி யங்கி கதவுகளும், மேற்கூரையும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால், பயணிகள் அவதிக் குள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே, 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகங்களில் படிப் படியாக இணைக்கப்பட்டு வரு கின்றன. இந்நிலையில், மேலும் 350 புதிய பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்கு வரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “அரசு போக்கு வரத்து கழகங்களில் பழைய பேருந்துகளை படிப்படியாக நீக்கி புதிய பேருந்துகளை இணைத்து வருகிறோம். புதிதாக இயக்கப் பட்டு வரும்படுக்கை வசதி, ஏசி பேருந்துகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரு கிறது. அதுபோல், சென்னையில் இயக்கப்படும் சிவப்பு நிற வகை பேருந்துகளும் பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ளன.
அடுத்த கட்டமாக 350 புதிய பேருந்துகள் அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. இன்னும் 2 வாரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இந்த புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்படும்’’ என்றார்.