ஆக.1-ல் மீன்வளப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

ஆக.1-ல் மீன்வளப் படிப்புக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு
Updated on
1 min read

மீன்வளப் படிப்புகளுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் மூலம் 8 இளநிலை பட்டப்படிப்புகள் மற்றும் 2 பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு 412 இடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 2 கட்டங்களாக நடைபெற்றுள்ளன. இதில் 300 இடங்கள் நிரப்பப் பட்டு மீதமுள்ள 112 இடங் களை நிரப்புவதற்கான 3-ம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த 3-ம்கட்ட கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரம், கட்ஆஃப் மதிப் பெண்கள் உள்ளிட்ட தகவல்கள் இணையதளத்தில் (www.tnfu.ac.in) பதிவேற்றம் செய்யப்பட் டுள்ளன. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக் கடிதத்தை இணைய தளத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மீன்வளப் பல்கலைக்கழகம் தெரி வித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in