

மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதனுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப் படுகிறது. பாரதிய வித்யாபவன் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரமம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி மாலை 5.30 மணிக்கு பாராட்டு விழா நடக்கிறது.
பாரதிய வித்யாபவன் தலைவர் எல்.சபாரத்தினம் தலைமை வகிக்கிறார். விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தஞ்சாவூரில் பிறந்த சண்முகநாதன் சுமார் 30 ஆண்டு கள் ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியராக இருந்தவர்.