

எம்.சி.ஏ. படிப்புக்கு பொதுப்பிரிவின ருக்கான மாநில அளவிலான கலந்தாய்வு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (ஜி.சி.டி.) நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் 160 பொறியியல் கல்லூரிகளிலும், 126 கலைக் கல்லூரிகளிலும் எம்.சி.ஏ.படிப்புகள் உள்ளன. இதேபோல், 276 பொறியியல் கல்லூரிகளிலும், 92 கலைக் கல்லூரிகளிலும் எம்.பி.ஏ. படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர விரும்புவர்கள் டான்செட் நுழைவுத் தேர்வு மூலமாக கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்படி, நடப்பு ஆண்டில் எம்.சி.ஏ. படிப்புக்கு 3,168 பேர் விண்ணப்பித்துள்ளனர். எம்.பி.ஏ. படிப்புக்கு 7,673 பேர் விண்ணப் பித்துள்ளனர். இவர்கள் பெற்ற டான்செட் மதிப்பெண் அடிப்படை யில் தரவரிசைப் பட்டியல் கடந்த 22-ம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் மாநில அளவிலான கலந்தாய்வு,, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நேற்று முன்தினம் தொடங்கியது. ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெறு கிறது. நேற்று முன்தினம், எம்.சி.ஏ. படிப்பில் மாற்றுத்திறனாளி களுக்கான கலந்தாய்வு நடைபெற் றது. இதில், சிவராஜ் என்பவர் மட்டும் கலந்து கொண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தார்.
பொதுப்பிரிவினருக்கான கலந் தாய்வு நேற்று தொடங்கியது. மொத்தம் 630 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.மொத்தம் 5 பிரிவாக கலந்தாய்வு நடைபெற் றது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 31-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து எம்.பி.ஏ. படிப்புக்கு வரும் ஆகஸ்ட் 2-ம்தேதி முதல் தொடங்கும் கலந் தாய்வு வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. கலந்தாய்வு குறித்த விவரங்களை www.gct.ac.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.