வேலூர் மக்களவை தொகுதியில் ஜூலை 29 முதல் ஓபிஎஸ் பிரச்சாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் ஜூலை 29 முதல் ஓபிஎஸ் பிரச்சாரம்
Updated on
1 min read

சென்னை

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 29-ம் தேதி முதல் 3 நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

வேலூர் மக்களவைத் தொகு திக்கு ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு அதிமுக சார் பில் கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தலைமையில் தேர்தல் குழுவை அதிமுக அமைத்துள்ளது. அவர் கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் பழனி சாமி வாணியம்பாடி சட்டப்பேர வைத் தொகுதியில் இருந்து தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கு கிறார். அதேபோல், அதிமுக ஒருங் கிணைப்பாளரும் துணை முதல்வ ருமான ஓ.பன்னீர்செல்வம் வரும் 29-ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

அதன்படி, 29-ம் தேதி மாலை 4- மணிக்கு அணைக்கட்டு தொகுதி ஒடுகத்தூர் பேரூராட்சியிலும், மாலை 6 மணிக்கு கீழ்வைத்தினாங் குப்பம் லத்தேரியிலும் பிரச்சாரம் செய்கிறார். 30-ம் தேதி மாலை 4 மணிக்கு குடியாத்தம் தொகுதியில் உள்ள பேரணாம்பட்டிலும், மாலை 6 மணிக்கு வேலூரிலும் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஆக. 1-ம் தேதி மாலை 4 மணிக்கு வாணி யம்பாடி தொகுதிக்குட்பட்ட ஆலங் காயத்திலும், மாலை 6 மணிக்கு ஆம்பூர் நகரிலும் நடக்கும் பிரச் சார பொதுக்கூட்டத்தில் பங்கேற் கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in