

சென்னை
அரசு கேபிள் டிவி மாத சந்தா கட்டணம் குறைப்பு தொடர்பாக ஓரிரு தினங்களில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறு வனத் தலைவராக நியமிக்கப்பட் டுள்ளார். எழும்பூரில் உள்ள அந்நிறு வனத்தின் தலைமை அலுவலகத் தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
ஏழை எளிய மக்கள் வசதிக்காக, குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்புகளை கொடுக்கும் வித மாக அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன்படி மாநிலம் முழுவதும் 78 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு அனலாக் சேவையை வழங்கி வந்தோம். டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, அரசு கேபிள் டிவி நிறுவனங்களுக்கு டிஜிட்டல் உரிமம் பெறுவதில் சிக்கல் இருந்தது. இதற்கிடையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் டிஜிட்டல் உரிமம் பெற்று, அரசு கேபிள் வாடிக்கையாளர்களை ஈர்த்துக்கொண்டன. தற்போது அரசு கேபிள் சார்பில் 35 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு, 34 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ஏழை மக்கள் வசிக் கும் கிராமப்புறங்களில் அதிக இணைப்புகளை வழங்க இருக்கி றோம். குறைந்த விலையில், தரமான சேவை, அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
அதற்காக மாநிலம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதன் விவரங் கள் முதல்வர் பழனிசாமியிடம் தெரிவிக்க இருக்கிறோம். அத னைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி சந்தா குறைப்பு தொடர்பாக ஓரிரு தினங்களில் அவர் அறிவிப்பார்.
அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் உள்ள வீடுகளில், அவற்றை அகற்றிவிட்டு, தனியார் செட்டாப் பாக்ஸ்களை நிறுவுவதாக புகார் கள் வருகின்றன. அத்தகைய செயல் களில் இனி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கேபிள் நிறுவன செட்டாப் பாக்ஸ்கள் பொதுமக்க ளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்டணம் வசூ லிப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது, அரசு கேபிள் நிறுவன மேலாண் இயக்குநர் பொ.சங்கர் உடனிருந்தார்.