

சென்னை
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அமைக்கப்பட்ட திமுக ஆய்வுக் குழு, தனது அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று வழங்கி யது.
இந்தி, சம்ஸ்கிருத திணிப்பு, மும்மொழி திணிப்பு, உயர் கல்வி யில் மாநிலங்களின் அதிகாரம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதகமான அம்சங்கள் இருப்பதாகக் கூறி, புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரை வுக்கு திமுக, இடதுசாரிகள் உட்பட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நடிகர் சூர்யா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
10 நாட்களுக்குள்...
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கை வரைவை ஆராய்ந்து அறிக்கை அளிக்க முன்னாள் அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, கல்வியாளர்கள் அ.ராமசாமி, ம.ராஜேந்திரன், பேரா சிரியர் கிருஷ்ணசாமி, பிரின்ஸ் கஜேந்திரபாபு, சமூக செயற்பாட் டாளர் சுந்தரவள்ளி, திமுக மாண வரணிச் செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், மக்களவை திமுக உறுப்பினர் எஸ்.செந்தில்குமார், சமூக சமத்துவத்துக்கான டாக்டர் கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் ஆகிய 10 பேர் கொண்ட குழுவை திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார். 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக் குமாறு இக்குழுவினரை ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார்.
அறிக்கை தயாரிப்பு
புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், பெற்றோர் கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், தமிழறிஞர்கள், பொதுமக்கள் ஆகி யோர் மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் திமுக அறிவித்திருந்தது.
அதன்படி புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவை முழுமையாக ஆய்வு செய்தும், பல்வேறு தரப்பினர் அளித்த கருத்துகளின் அடிப்படை யிலும் புதிய கல்விக் கொள்கை குறித்து அறிக்கையை ஆய்வுக் குழு தயாரித்துள்ளது.
திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சந்தித்த க.பொன் முடி, தங்கம் தென்னரசு உள்ளிட்ட குழுவினர், தங்களது ஆய்வு அறிக்கையை அளித்தனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை குறித்த திமுகவின் கருத்துகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் திமுக எம்.பி.க்கள் தெரிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.