Published : 27 Jul 2019 07:35 AM
Last Updated : 27 Jul 2019 07:35 AM

3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது; திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு

திருத்தணி 

திருத்தணி முருகன் கோயிலில் நேற்று ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதையொட்டி 3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கி யது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத் தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா கடந்த 24-ம் தேதி ஆடி அஸ்வினி விழாவோடு தொடங்கி யது.

நாளை வரை நடைபெற உள்ள இவ்விழாவின் ஒரு பகுதியாக ஆடி கிருத்திகை திரு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

இதில், அதிகாலை 4 மணியள வில் மூலவருக்கு சிறப்பு அபிஷே கம் மற்றும் அலங்காரம், தங்கவேல், தங்க கீரிடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல், காவடி மண்டபத் தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவருக்கு தீபாராதனை நடைபெற்றது.

தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்து அதிகாலை முதல் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி உள்ளிட்ட பல வகையான காவடிகளுடன் பங்கேற்றனர்; சரவணப் பொய்கை குளம் மற்றும் நல்லாங்குளம் ஆகிய பகுதிகளில் மொட்டையடித்து தங்களின் நேர்த் திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ் வரி ரவிக்குமார், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் முருகப்பெருமானை வணங்கினர்.

ஆடி கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானம் மற்றும் பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில், சுப்ரமணிய சுவா மிக்கு பட்டு வஸ்திரங்கள் அணி விக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு சரவணப் பொய்கையில் 3 நாள் தெப்பத் திருவிழா கோலாகலமாக தொடங்கி யது. இதில், உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன், வண்ண மின் விளக்குகள், மலர் களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தில் எழுந்தருளி, 3 முறை குளத் தைச் சுற்றி வலம் வந்து, ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்தத் தெப்பத் திருவிழாவில், மாலை முதல் இரவு வரை கோயில் ஊழியர்களின் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி, திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் பங்கேற்ற பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதேபோல, சிறுவாபுரி பால சுப்ரமணிய சுவாமி கோயில், ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட முருகன் கோயில் களில் நேற்று ஆடி கிருத்திகை வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x