Published : 27 Jul 2019 07:26 AM
Last Updated : 27 Jul 2019 07:26 AM

2-வது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை

இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த தேன்மொழி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

எனது கணவர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றார். எங்களுக்கு 1982-ல் திருமணமானது. அதன்பிறகே என் கணவருக்கு ஏற்கெனவே முத்து லெட்சுமி என்பவருடன் திருமணம் முடிந்து, அவர்களுக்கு 3 குழந்தை கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித் தேன். பின்னர் சமரசத் தீர்வு மையத் தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட் டது. அப்போது இரு குடும்பத்தை யும் கவனித்துக் கொள்வதாக கணவர் தெரிவித்தார். இந்நிலை யில் 2011-ல் என் கணவர் உயிரிழந் தார். ஆனால் அவருக்குரிய ஓய்வூதி யம் மற்றும் பணப்பலன்களில் எனக்குரிய பங்கு வழங்கப்பட வில்லை. எனவே, ஓய்வூதியம், பணப்பலன்களில் ஒரு பங்கை எனக்கு வழங்க உத்தரவிட வேண் டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: 2-வது திருமணம் போன்ற புகார்கள், அரசு ஊழியர்கள் மீது அதிகளவில் உள்ளன. இத னால் ஏற்படும் பிரச்சினை அவர்கள் பணியிலிருக்கும்போது தெரிவ தில்லை. அவர்கள் இறந்த பிறகு பணிப் பலன்களுக்காக வழக்குத் தொடரும்போதுதான் இந்த விவ காரங்கள் வெளியே தெரிய வருகின் றன. இரண்டு திருமணங்கள் செய்வது நன்னடத்தை அல்ல. சட்டப்படி இது குற்றமும்கூட. இருப்பினும் இதனைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஊழியர்கள் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்கின்றனர். காவல்துறையில் பணிபுரியும் ஒருவரின் இரண்டாம் திருமணப் பிரச்சினையை சமரசத் தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாகவும், வேதனையாகவும் உள்ளது.

இது போன்ற பிரச்சினைகள் தெரியவரும்போது சம்பந்தப்பட்ட வர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.

தமிழக அரசின் ஓய்வூதிய விதிப் படி அரசு ஊழியரின் குடும்ப ஓய்வூதியத்தை அவரது சட்டப் பூர்வமான மனைவிக்கு வழங்கப் பரிந்துரைக்கலாம். அரசு ஊழியரின் பணிப் பதிவேட்டில் மனைவி தொடர்பாக ஒரு முறைப் பதிவு செய்த பிறகு, மனைவி இறந்தால் தவிர அதில் வேறு மாற்றம் செய்ய முடியாது. இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.

இதனால் அரசு ஊழியர் ஓய் வூதியத்துக்காக மனைவி பெயரை பரிந்துரைக்கும் ஆவணங்களை தமிழக நிர்வாகத்துறைச் செயலர் முறையாக ஆய்வு செய்ய வேண் டும். 2-வது திருமணம் செய்தது தொடர்பாக புகார் வந்தால் சம்பந்தப்பட்டவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், அவர் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x