மத்திய பாடத் திட்டத்தில் திருக்குறள் வருமா?- சீமான் கேள்வி

மத்திய பாடத் திட்டத்தில் திருக்குறள் வருமா?- சீமான் கேள்வி
Updated on
1 min read

கல்வி வணிக மயமாகிவிட்ட நிலையில், புதிய கல்விக்கொள்கை மாணவர்களிடன் அறிவை வளர்க்க உதவாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''புதிய கல்விக் கொள்கையில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றன என்பதை நீங்கள் படித்துப் பார்த்தால் தெரியும். 

அடிப்படையிலேயே கல்வி மாநில உரிமை சார்ந்தது. அதைக் கொடுங்கள். என் மொழி, என் கதை, என் பண்பாடு, என் வாழ்வியல் நீதி, எனக்கென்ற வேதம் திருக்குறள். இதெல்லாம் மத்தியப் பாடத்திட்டத்தில் வருமா?

3,5,8-ம் வகுப்புகளில் தேர்வு என்கிறீர்கள். கல்வியில் முதலிடத்தில் உள்ள தென் கொரியா, 8 வயதில்தான் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கிறது. ஆனால் நீங்கள் 8 வயதில் பொதுத்தேர்வு என்கிறீர்கள். 

நாங்கள் தேர்வு இல்லாத தேர்ச்சியை 8-ம் வகுப்பு வரை கேட்கிறோம். சுவரில்லாத கல்வி கேட்கிறோம். 9-ம் வகுப்பில் மாதிரித் தேர்வு வையுங்கள். ஏனெனில் 10-ம் வகுப்பில் பொதுத்தேர்வு வருகிறது.

இரண்டாவதாக ஓர் அடிப்படைக் கேள்வி. கல்வியை சந்தைப் பொருளாக்கிவிட்டீர்கள். முதலாளிகளின் விற்பனைப் பண்டமாக மாற்றிய பிறகு, கல்விக்கொள்கை யாருக்குப் பயன்படப் போகிறது?

மேலதிகமாக முதலாளிகள் லாபம் ஈட்ட உதவுமே ஒழிய, மக்களின், மாணவர்களின் அறிவை வளர்க்க இது உதவவே உதவாது'' இவ்வாறு  சீமான் தெரிவித்தார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in