வேலூர் மக்களவை தேர்தலுக்காக பிரச்சாரத்துக்காக குவிந்த வெளிமாவட்ட தொண்டர்கள்: வாக்கு சேகரிப்பு பணியால் சூடுபிடித்தது தேர்தல் களம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

வேலூர் 

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு சேகரிப்புப் பணிக்காக வெளி மாவட்ட தொண்டர்கள் குவிந்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட்டத்தை கூட்டி வாக்கு சேகரித்து வருகின்றனர்.

வேலூரில் நிறுத்தப்பட்ட மக்களவைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி உள்ளிட்ட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

வேலூர் தொகுதியை வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் அதிமுக, திமுகவினர் உள்ளனர். ஏறக்குறைய கவுரப் பிரச்சினையாக மாறியுள்ள தேர்தலை சந்திக்க மாபெரும் தொண்டர்கள் படையு டன் அதிமுக, திமுவினர் பிரச் சாரத்தை தொடங்கியுள்ளனர். அதிமுக, திமுகவுக்கு மாற்று நாங்கள் தான் என்று கூறிவரும் நாம் தமிழர் கட்சியும் மாநிலம் முழுவதும் இருந்து முக்கிய மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் படையுடன் களமிறங்கியுள்ளனர்.

அதிமுக சார்பில் 30 அமைச்சர் கள் மற்றும் முன்னாள் அமைச்சர் கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக தரப்பில் முன்னாள் அமைச் சர்கள் மேற்பார்வையில் சட்டப் பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் கொண்ட குழுவி னர் தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற னர். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ் வொரு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.30 ஆயிரம் வாடகை

வாக்கு சேகரிப்புக்காக வெளி மாவட்ட நிர்வாகிகள் அவர்களுக் குரிய பகுதிகளில் குவியத் தொடங் கியுள்ளனர். இதன் காரணமாக, வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டப்பேரவை தொகுதி களிலும் வெளி மாவட்ட தொண்டர் கள் வலம் வருவது திருவிழா போல் உள்ளது. நிர்வாகிகள் 10 நாட்கள் தங்குவதற்கு வீட்டு வாடகையாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்த வேண்டியுள்ளது.

அதிமுக தரப்பில் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட அமைச் சர்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பணிமனை களை தொடங்குவதில் இருந்து நிர்வாகிகளையும் சந்தித்து வருகின் றனர். மேலும், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பின ரையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திமுக தரப்பிலும் அதிமுகவுக்கு இணையாக சூடு குறையாமல் தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் வெளிமாவட்ட நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி முக்கிய பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகின்றனர். வரும் நாட்களில் அதிமுக, திமுக தரப்பில் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in