

கே.சுரேஷ்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட் டில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று தனி நபர் நடத்திய மொய் விருந்தில் ரூ.4 கோடி மொய் தொகை வசூலானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக் குடி தாலுகாக்களில் குறிப்பிட்ட பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மொய் விருந்து நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், வடகாட்டில் டி. கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஏற்பாடு செய்திருந்த மொய் விருந்து விழா நேற்று நடைபெற்றது. இந்த ஆண் டில் இதுவரை தனி நபர் வேறு யாருக்கும் வசூலாகாத அளவுக்கு ரூ.4 கோடி மொய் தொகை இவருக்கு வசூலானது. விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பந்தலில் 14 இடங்களில் மொய் எழுதும் பணி நடைபெற்றது. மொய் செய்தவர் களுக்காக ரூ.10 லட்சம் செலவில் 1 டன் ஆட்டுக் கறியுடன் சுவையான விருந்து பரிமாறப்பட்டது.
மொய் விருந்து நடைபெற்ற பந்தலில், மொய் பணத்தை இயந்தி ரம் மூலம் எண்ணி சரிபார்க்கும் பணி கல்லாலங்குடியில் உள்ள ஒரு தனியார் வங்கியிடம் ஒப்படைக் கப்பட்டது. விருந்து நடைபெற்ற பகுதியில் துப்பாக்கி ஏந்திய தனி யார் பாதுகாவலர்கள் 5 பேர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர, விருந்து நடைபெற்ற பந்தல் பகுதிகள் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு தீவிர மாக கண்காணிக்கப்பட்டது.
இதுகுறித்து மொய் விருந்து ஏற்பாட்டாளர் தரப்பில் கூறியதா வது: நிகழாண்டு இப்பகுதியில் 20 பேர் வீதம் சேர்ந்து 100 இடங்களில் (மொத்தம் 2,000 பேர்) மொய் விருந்து விழா நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மொய் விருந்துகளின் மூலம் மொத்தம் ரூ.500 கோடி வசூலாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இதில், அதிக பட்சமாக வடகாட்டில் மட்டும் 17 நாட்களில் 250 பேர் மொய் விருந்து நடத்த உள்ளனர்.டி.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்திருந்த மொய் விருந்தில் நேற்று மாலை வரை ரூ.4 கோடி வசூலானது. இந்த விருந்துக்காக 1 டன் ஆட்டுக்கறியைக் கொண்டு உணவு சமைத்து பரிமாறப்பட் டது. 10 ஆயிரம் பேர் உணவருந்தி உள்ளனர்.
நிகழாண்டில் இதுவே தனி நபருக்கு வசூலான அதிகபட்ச மொய் தொகையாகும். கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நபர் களுக்கு இவர் ரூ.2.5 கோடி மொய் செய்துள்ளாராம். எனவே, இவரது விருந்தின் மூலம் ரூ.7 கோடி மொய் வசூலாகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ரூ.4 கோடி வசூலாகி உள்ளது. மொய் வசூல் குறைந்த தற்கு கடந்த ஆண்டு மாவட்டத்தைச் சூறையாடிய கஜா புயல் பாதிப்பு முக்கிய காரணம் என்று தெரிவித்தனர்.