Published : 26 Jul 2019 08:25 AM
Last Updated : 26 Jul 2019 08:25 AM

‘இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன்’-‘ரூட் தல’ மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரம் வாங்க முடிவு: 3 கல்லூரி முதல்வர்களுடன் போலீஸார் ஆலோசனை

சென்னையில் நேற்று முன்தினம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தி போன்ற ஆயுதங்களால் சக மாணவர்களைத் தாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, 3 கல்லூரி முதல்வர்களுடன் சென்னை மாநகர காவல் இணை ஆணையர் (கிழக்கு) ஆர்.சுதாகர் நேற்று ஆலோசனை நடத்தினார். படம்: பி.ஜோதிராமலிங்கம்

சென்னை

‘ரூட் தல’ மாணவர்கள் 90 பேரிடம், ‘இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன்’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 3 கல்லூரி முதல்வர்களுடன் போலீஸார் நேற்று ஆலோசனை நடத் தினர்.

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கடந்த 23-ம் தேதி பட்டாக் கத்தி போன்ற ஆயுதங்களால் சக மாணவர்களைத் தாக்கியதில் வசந்த் என்ற மாணவர் படுகாயம் அடைந்தார். மேலும் 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டதாக மதன், ஸ்ருதி, ரவிவர்மன், ராகேஷ்குமார் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் சரவணன், ஆகாஷ் ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இவர்களில் 2 மாணவர்கள் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ‘ரூட் தல’ விவகாரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், கல்லூரி மாணவர் களுக்கு இடையேயான மோதலைத் தடுக்கும் வகையில் நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி, புதுக்கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்களுடன் காவல் இணை ஆணையர் சுதாகர் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“4 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் கள் வரும் பேருந்துகளின் 6 வழித்தடங் களில்தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த 6 வழித்தடங்களில் ‘90 ரூட் தல மாணவர்கள்’ உள்ளனர். இந்த 90 பேர்தான் அடிக்கடி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த மாணவர்களிடம் ‘இனி எந்தத் தவறும் செய்ய மாட்டேன்’ என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்க இருக்கிறோம்.

அவ்வாறு எழுதிக் கொடுத்த பின்ன ரும் தவறு செய்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் கள். மேலும், முன்னாள் மாணவர்கள் சிலர் தற்போதைய மாணவர்களை வன் முறை சம்பவங்களில் ஈடுபடத் தூண்டுகின் றனர். அந்த மாணவர்கள் பிடிபட்டால் உடனே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மாணவர்களுக்கும், பொதுமக்களுக் கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்தை சரிசெய்யும் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்த இருக்கிறோம். ‘ரூட் தல’ மாணவர்களின் பெற்றோரையும் நேரில் அழைத்து பேச இருக்கிறோம்.

இவ்வாறு காவல் இணை ஆணையர் சுதாகர் கூறினார்.

சென்னையில் ஏராளமான கல்லூரிகள் இருந்தாலும், பெரும்பாலும் வன்முறை சம்பவங்களில் அடிபடுவது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி, நந்தனம் கல் லூரி, புதுக்கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளின் பெயர்கள்தான். இக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு இடையே ‘ரூட் தல’ என்கிற ஒரு விஷயத்தில் மட்டுமே அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.

இக்கல்லூரிகளில் படிக்கும் பெரும் பாலான மாணவர்கள் பேருந்துகளில்தான் வருகின்றனர். 6டி, 27, 29, 53, 18கே, 12பி என ஒவ்வொரு வழித்தடத்தில் (ரூட்) இருந்து வரும் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களில், ஒரு ரூட்டுக்கு ஒரு மாணவன் தலைமையாக இருந்து செயல்படுவார். இந்த தலைமைக்கு பெயர்தான் ‘ரூட் தல’. ‘அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தில் இந்த காட்சிகளை காட்டியிருப்பார்கள்.

கெத்துகாட்டும் ‘ரூட் தல’

‘ரூட் தல’யாக இருக்கும் மாணவர் ஒருவரிடம் பேசியபோது, “ரூட் தலயாக இருப்பது ஒரு கெத்து. எனக்கு மற்ற மாணவர்கள் மரியாதை செய்வார்கள். நான் சொல்கிறபடி எல்லாம் செய்வார்கள். பாடச் சொன்னால் பாடுவார்கள். நிறுத்தச் சொன்னால் நிறுத்துவார்கள். கல்லூரியில் எனக்கு மரியாதை கிடைக்கும். எனது ரூட்டில் எல்லோரும் எந்த பேருந்தில் ஏற வேண்டும் என்று நான்தான் முடிவு செய்வேன். அந்த பேருந்தில் ஏறுபவர்கள் எல்லோரும் என் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

‘ரூட் தல’ குறித்து மற்ற சில மாணவர்கள் கூறுகையில், “ரூட் தல பெயரில் எங்களை மிரட்டுவார்கள். 5 முதல் 15 பேர் வரை ஒரு குழுவாகச் சேர்ந்து கொண்டு பேருந்தில் அராஜகம் செய்வார்கள். ஒரு பேருந்தில் இரு கல்லூரி மாணவர்கள் ஏறினால், இரண்டு ரூட் தலைகள் இருப்பார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படுகிற பிரச்சினையே மோதலில் முடியும். ஒரு வகுப்பில் 30 பேர் இருந்தால் அதில் 5 பேர் மட்டுமே ரவுடியிசம் செய்கின்றனர். அந்த 5 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலே போதும், அனைத்து பிரச்சினைகளும் முடிந்து விடும்” என்றனர்.

முன்னாள் மாணவர்கள் கருத்து

முன்னாள் மாணவர்கள் சிலர் கூறுகை யில், “எங்கள் கல்லூரிகளில் பொழுது போக்கு அம்சங்கள் எதுவுமே கிடையாது. பாட்டு, நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, பிற கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அனைத்து வகையான போட்டிகள் நடத்துவது என எந்த அம்சமும் இல்லை. கடமைக்காக மட்டும் சில நிகழ்ச்சி களை கல்லூரிக்கு உள்ளேயே நடத்தி முடிக் கின்றனர். மாணவர்களின் சிந்தனையை கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் திருப்பினால், வன்முறைகளைத் தடுக்க முடியும். துறைரீதியான நூலகம்கூட எங்கள் கல்லூரியில் இல்லை. கேம்பஸ் இன்ட்டர்வியூவும் நடத்தப்படுவதில்லை” என வருத்தத்துடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x