பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்; தமிழக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை: காணொலி காட்சியில் நடத்தினார்

பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரம்; தமிழக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை: காணொலி காட்சியில் நடத்தினார்
Updated on
1 min read

சென்னை

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக தமிழக பாஜக தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் தேசியத் தலைவர் அமித்ஷா காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

பாஜக உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதுப்பித்தல் 6 ஆண்டு களுக்கு ஒருமுறை நடைபெறும். அதன்படி கடந்த 6-ம் தேதி தொடங்கிய இப்பணி, 3 மாதங்கள் நடைபெறவுள்ளது. அதன்பிறகு கிளை கமிட்டி முதல் தேசியத் தலைவர் வரை உள்கட்சி தேர்தல் நடைபெறும்.

தேசிய அளவில் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், தமிழக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராக மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் இதுவரை நடைபெற்றுள்ள உறுப்பினர் சேர்க்கை விவரங்கள், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக பாஜக தலைவர் களுடன் காணொலி காட்சி மூலம் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகள் பங்கேற்பு

சென்னை தி.நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத் தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மாநில உறுப் பினர் சேர்க்கை பொறுப்பாளர் எம்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அறிவுரைகள்

உறுப்பினர் சேர்க்கை தொடர் பாக அமித்ஷா, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்புப் பொதுச்செய லாளர் பி.எல்.சந்தோஷ், தேசிய உறுப்பினர் சேர்க்கை பொறுப் பாளர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் தமிழக நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டனர்.

உறுப்பினர் சேர்க்கை தொடர் பாக பல்வேறு ஆலோசனைகளை யும், அறிவுரைகளையும் வழங்கிய தாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in