Published : 26 Jul 2019 07:42 AM
Last Updated : 26 Jul 2019 07:42 AM

ஆடி அமாவாசை விழா ஏற்பாடு தீவிரம்; சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி: மலையில் முடி காணிக்கை செலுத்த தடை

இ.மணிகண்டன்

விருதுநகர்

ஆடி அமாவாசை விழாவை முன் னிட்டு பக்தர்கள் நாளை (ஜூலை 27) முதல் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள் ளது.

விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இங்கு 18 சித்தர் களால் பூஜித்து வழிபட்ட சுயம்பு லிங்கங்களான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. அடிவாரமான தாணிப் பாறையில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் இக்கோயில்கள் அமைந் துள்ளன.

இக்கோயில்களில் ஆடி அமா வாசை வழிபாடு முக்கிய விழா வாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா வரும் 31-ம் தேதி நடைபெறு கிறது. இதற்காக பக்தர்கள் சதுரகிரி மலைக்கு நாளை (ஜூலை 27) முதல் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

ஆடி அமாவாசைக்காக சதுர கிரிக்கு சுமார் 1 லட்சம் பக்தர் கள் வருவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது. சதுரகிரியில் பக்தர் களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதித் துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பாதையான தாணிப்பாறை வழியாக மட்டுமே காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். இரவு நேரங் களில் பக்தர்கள் வனப் பகுதிக்குள் தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. விருதுநகர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் கோயில் செயல் அலுவலர் சிவராம சூரியன் கூறிய தாவது: மழை இல்லாததால் சதுரகிரி மலையில் கோயில்கள் அமைந்துள்ள பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. மலையில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திவிட்டு குளித்து விட்டு சுவாமியை தரிசிக்கச் செல் வது வழக்கம். இம்முறை தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் அடிவாரப் பகுதியான தாணிப்பாறையிலேயே முடிகாணிக்கை செலுத்திவிட்டு மலையேற வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x