Published : 26 Jul 2019 07:36 AM
Last Updated : 26 Jul 2019 07:36 AM

ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் உண்ணாவிரதம்: இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். சங்க மாநிலத் தலைவர் தா.புண்ணியமூர்த்தி, அமைப்புச் செயலாளர் தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்த புதுச்சேரி மாநில முதல் வர் நாராயணசாமி பேசியதாவது:

ஹைட்ரோகார்பன் திட்டம் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால்தான் அதை எதிர்க் கிறோம். இந்த திட்டத்தை அமெரிக்காவில் உள்ள ஓமால்டா மாநிலத்தில் செயல்படுத்திய பின்னர் அங்கு பூகம்பம் ஏற்பட்டு, மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் பாஜக உட்பட அனைத்துக் கட்சியினரும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். எந்தச் சூழ லிலும் இத்திட்டத்தை புதுச்சேரிக்குள் அனு மதிக்க மாட்டோம். மத்திய அமைச்சர்களைச் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்துவேன் என்றார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங் களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிக்க வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுச்சேரி மாநில சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களவை உறுப் பினர் சு.வெங்கடேசன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், செ.ராமலிங்கம், சண் முகம், அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

போராட்டத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் மணி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

நிறைவாக திமுக மாநிலங்களவை உறுப் பினர் ஆலந்தூர் பாரதி, பழச்சாறு வழங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 26) நாடாளுமன்றத்தை முற் றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளது என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x