

திருநெல்வேலி
நெல்லையில் படுகொலை செய்யப் பட்ட முன்னாள் மேயர் வீட்டு பணிப் பெண்ணின் 3 மகள்கள் பெற்றோரை இழந்து நிர்கதியாகி உள்ளனர்.
திருநெல்வேலியில் மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ் வரி, அவரது கணவர் முருக சங்கரன் ஆகியோர், ஒரு கும்பலால் வீடு புகுந்து கொலை செய்யப் பட்டனர். அப்போது, அவர்களது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த, பணிப்பெண் மாரி என்ற மாரியம்மாள் (37) என்பவரும் கொலை செய்யப்பட்டார்.
மாரியின் கணவர் முருகுகனி 10 ஆண்டுகளுக்கு முன் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டார். இவர் களுக்கு, வீரலெட்சுமி (17), ஜோதி லெட்சுமி (15), ராஜேஸ்வரி (13) என்ற 3 மகள்கள் உள்ளனர். பாளையங்கோட்டை டீச்சர்ஸ் காலனியில் வாடகை வீட்டில் வசித்தபடி. அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை பார்த்து, தனது மகள்களை படிக்க வைத்தார். அத்துடன், வயதான தனது தாய் வசந்தாவையும் கவனித்து வந்தார்.
பாளையங்கோட்டையில் உள்ள பள்ளியில் வீரலெட்சுமி 12-ம் வகுப்பும், ஜோதிலெட்சுமி 10-ம் வகுப்பும், ராஜேஸ்வரி 8-ம் வகுப்பும் படிக்கின்றனர். வீடுகளில் வேலை பார்ப்பதன் மூலம் கிடைக் கும் சொற்ப வருமானத்தில், வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு, குடும்பச் செலவுகளை யும் சமாளித்து, மகள்களையும் படிக்க வைத்துள்ளார் மாரி.
மருத்துவராக்க ஆசைப்பட்டார்
மாரியின் மரணம் குறித்து அவரது மூத்த மகள் வீரலெட்சுமி கூறும்போது, “எங்கள் தாய் படிக்கவில்லை. ஆனால், எங்களை மருத்துவராக்க வேண்டும் என்று ஆசையோடு, பல வீடுகளில் ஓய்வின்றி வீட்டு வேலைகள் பார்த்து, எங்களை படிக்க வைத்தார். எங்கள் தாயின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கண்ணீருடன் கூறினார்.
தாயையும், தந்தையையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் 3 பெண்களின் எதிர்காலத்தை நினைத்து வேதனையுடன் இருக் கிறார் மாரியம்மாளின் தாயார் வசந்தா.
`3 சிறுமிகளின் கல்விக் கும், எதிர்காலத்துக்கும் உதவி செய்ய தமிழக அரசும், தொண்டுள் ளம் கொண்டவர்களும் உதவ வேண்டும்’ என அவர் கோரிக்கை விடுத்தார்.