சிறையில் இருந்து நளினி இன்று பரோலில் வருகிறார் 

சிறையில் இருந்து நளினி இன்று பரோலில் வருகிறார் 
Updated on
1 min read

வேலூர் 

மகளின் திருமணத்துக்காக வேலூர் சிறையில் இருந்து நளினி இன்று ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மகள் ஹரித்ரா, லண்டனில் வசித்து வருகிறார். ஹரித்ராவுக்கு திரு மணம் செய்து வைக்க 6 மாதங் களுக்கு பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத்தாக்கல் செய்தார். இதன் மீது நடந்த விசாரணையில் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

அதன்படி, வேலூர் சத்துவாச் சாரி புலவர் நகரில் உள்ள திராவி டர் இயக்க தமிழர் பேரவையின் மாநில துணை பொதுச் செயலாளர் சிங்கராயர் என்பவர் வீட்டில் நளினி தங்க உள்ளார். அவர் தங்க உள்ள இடம் பாதுகாப்பானதா? என்று ஏற்கெனவே க்யூ பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். மேலும், நளினியின் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட தனிப்பிரிவு மற்றும் சத்து வாச்சாரி காவல் நிலையம் சார்பில் வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ஜெயபாரதியிடம் அறிக்கை அளித் துள்ளனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, ‘‘நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ள ஆணை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு வரப்பெற்றுள்ளது. அதன் பேரில் அவர் தங்கவுள்ள இடத்தில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. 25-ம் தேதி (இன்று) காலை 8 மணிக்கு அவரை பாதுகாப்புடன் சிறையில் இருந்து அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in