

வேலூர்
பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளை ஆந்திர அரசு உயர்த்திக் கட்டி வரும் பிரச்சினை யில் பேச்சுவார்த்தை நடத்தித்தான் தீர்வு காண முடியும் என்றும் இதற்கு தமிழக முதல்வர் முயற்சி எடுப்பார் எனவும் அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் கூறினார்.
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில், அதற்கான அறிவிப்பு வரும். உருது படிக்கும் மாணவர் களுக்கு புதிய பாடத்திட்டத்தின்படி நாளைக்குள் (ஜூலை 26) பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்.
மாநிலம் முழுவதும் அரசு பள்ளி களின் உள்கட்டமைப்புகளை ரூ.1,200 கோடி செலவில் மேம் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் அரசுக்கு ஒருபோதும் இல்லை. நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழி கல்வியில் 67 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதை வரும் கல்வியாண்டில் உயர்த்த போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட் டம் கைவிடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. குறிப் பாக, பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வியை ஊக்கப்படுத்தவே அரசு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது. அதேபோல் தான் மடிக்கணினியும். இந்த 2 திட்டங்களும் தொடர்ந்து வழங்கப் படும். இதில், எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆந்திர மாநிலத்தில் பாலாற் றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை, உயர்த்திக் கட்டும் பணிகள் நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. இப் பிரச்சினையில் பேசி தான் தீர்வு காண வேண்டும். அதற்கான நடவ டிக்கைகளை தமிழக முதல்வர் எடுப்பார். அவசரப்பட்டு எதையும் செய்துவிட முடியாது. இது இரு மாநில பிரச்சினை.
ஆந்திராவில் தமிழர்களும், தமிழகத்தில் ஆந்திர மக்களும் வசிக்கின்றனர். குறிப்பாக, தமிழக வடமாவட்டங்களில் தெலுங்கு பேசும் மக்களும், ஆந்திர எல்லைப் பகுதிகளில் தமிழர்களும் அதிக மாக வசிக்கின்றனர். எனவே, அம் மாநில அரசுடன் கலந்து பேசி சுமூக தீர்வு காணப்படும்” என்றார்.