Published : 25 Jul 2019 09:10 AM
Last Updated : 25 Jul 2019 09:10 AM

சென்னைக்கு 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல வேகன்களில் நீரேற்றும் நேரத்தை குறைத்து ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் தகவல்

ஜோலார்பேட்டை

சென்னைக்கு திட்டமிட்டபடி ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல ரயிலின் வேகத்தை அதிகரிக் கவும், வேகன்களில் நீர் நிரப்பும் நேரத்தை குறைக்கவும் தேவை யான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல்ராஜ் கூறினார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து காவிரி கூட்டுக் குடிநீரை ரயில் மூலம் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து, பார்ச்சம்பேட்டை 5-வது யார்டில் இருந்து ரயில்வே வேகன்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் பணி கடந்த 12-ம் தேதி தொடங்கி யது. தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் எடுத்துச்செல்ல திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், ஒரே ரயிலில் தினசரி 25 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், 2-வது ரயில் நேற்று முன்தினம் ஜோலார் பேட்டைக்கு வந்தது. இதையடுத்து, 2 ரயில்களில் பொருத்தப்பட்ட 100 வேகன்களில் தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந் நிலையில், 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னைக்கு கொண்டு வருவதற் கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை ஜோலார்பேட்டைக்கு வந்தனர்.

இக்குழுவினர், ஜோலார் பேட்டை அடுத்த மேட்டு சக்கர குப்பம் பகுதிக்கு சென்று அங்குள்ள மேல்நீர்த்தேக்க தொட்டி மற்றும் பார்ச்சம்பேட்டையில் உள்ள ராட்சதக் குழாய்கள், கேட்வால்வு கள், குடிநீர் பரிசோதனை நிலை யம், ரயில்வே வேகன்களில் நீரேற் றும் முறையை ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களி டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இணை இயக்குநர் நிர்மல்ராஜ் கூறியதா வது:

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டன. ஆனால், நேரமின்மை காரணமாக சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தீர்வு காணவே ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது 2 ரயில்களில் தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் சென்னைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

50 வேகன்களில் குடிநீர் நிரப்ப 3 மணி நேரம் ஆகிறது. இந்த நேரத்தை முதலில் குறைக்க வேண் டும். 2 மணி நேரத்தில் வேகன் களில் குடிநீரை நிரப்ப ஆலோசிக் கப்பட்டுள்ளது.

அதேபோல, ஜோலார்பேட்டை யில் இருந்து சென்னைக்கு சென்று சேர குடிநீர் கொண்டு செல்லும் ரயில் 5 முதல் 6 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. எனவே, குடிநீர் கொண்டு செல்லும் ரயிலின் வேகத்தை அதிகரித்து 4 மணி நேரத்தில் சென்னையை சென்று அடைய ஏற்பாடு செய்யுமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஓரிரு வாரங்களில் தொடங்கும்

ஓரிரு வாரங்களில் தினசரி 1 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல துரித நடவடிக்கை எடுக்கப் படும். அதற்கான அனைத்து முயற்சி களையும், மெட்ரோ அதிகாரிகளு டன் இணைந்து செய்து வரு கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x