

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப் படத் தொழிலாளர்கள் சம்மேளனத் துக்கும் (பெப்சி) இடையே ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் சுமுக முடிவு ஏற்படாத தால் தயாரிப்பாளர் சங்கம் கடந்த திங்கள்கிழமை முதல் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்திருந் தது. இந்நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதால் மீண்டும் படப்பிடிப்பை தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து 2 அமைப்புகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழி லாளர்கள் சம்மேளனத்துக்கு இடை யில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பேச்சுவார்த்தையில் அனைத்து சங்கங்களுக்குமான ஊதிய உயர்வு குறித்து சுமுக முடிவு ஏற்பட்ட நிலையில், தென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டன்ட் நடிகர்கள் சங்கத்துடன் மட்டும் பேச்சு வார்த்தை நிலுவையில் உள்ளது. மற்ற அமைப்புகளுடன் சுமுக உடன்படிக்கை ஏற்பட்ட காரணத்தால் படப்பிடிப்புகள் மற்றும் அது சார்ந்த பணிகளை மீண்டும் வழக்கம் போல் நடத்துவது என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
மறைந்த அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வியாழக்கிழமை (ஜூலை 30) ஒரு நாள் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமை (ஜூலை 31) முதல் மீண்டும் வழக்கம்போல் படப்பிடிப்புகள் நடைபெறும். புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பொது விதிகள் மற்றும் புதிய ஊதியங்கள் பற்றிய விவரங்களை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் கள் சங்கத்தை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.