

சென்னை
அத்திவரதரை தரிசிக்க வரும் பக் தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புபவர் கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில், 40 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக் கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி இந்த நிகழ்வு தொடங்கியது. ஆகஸ்ட் 17-ம் தேதி வரை அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க முடியும்.
இந்நிலையில், அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் சிலர் மரணமடைந்ததால், பக்தர்களுக் கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து, முதல்வர் பழனி சாமி தலைமையில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு, பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டது. பக்தர்களுக்கு பல் வேறு வசதிகளும் ஏற்படுத்தப் பட்டன.
இந்நிலையில், முதல்வர் பழனி சாமி நேற்று முன்தினம் மாலை காஞ்சிபுரம் சென்றார். அங்கு, அத்திவரதர் வைபவத்துக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, அறநிலையத் துறைச் செயலர் அபூர்வ வர்மா, மின்வாரியத் தலைவர் விக்ரம் கபூர், போக்குவரத்து துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, நகராட்சி நிர்வாக ஆணையர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள் ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத் தில், குடிநீர், சுகாதாரம், போக்கு வரத்து, பாதுகாப்பு வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆய்வுக்கூட்டம் முடிந்ததும், தொலைதூரத்தில் இருந்து அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அன்னதானம் வழங்குவதற்காக, தன் சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி அன்னதானத்துக்கு நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
மேலும், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை கொடுக்க விரும்புவோர், ‘அருள்மிகு தேவ ராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சி புரம்’ என்ற பெயரில் காசோலை/ வரைவோலை எடுத்து, ‘செயல் அலுவலர், அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்’ என்ற முகவரிக்கு அனுப்பலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.