காசோலை மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 
Updated on
1 min read

சென்னை 

காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி இரா.அன்பரசு மற்றும் ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மணி ஆகியோருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

மறைந்த சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.35 லட்சத்தை ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை கடனாகப் பெற்றது. அதற்கு அதன் நிர்வாகிகளான காங்கிரஸ் முன் னாள் எம்பி இரா.அன்பரசு, அவரது மனைவி கமலா மற்றும் அறக் கட்டளை நிர்வாக அறங்காவலர் மணி ஆகியோர் கையெழுத்திட்ட காசோலைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை வங்கியில் பணம் இல்லை என்று திரும்பிவிட்டன.

இதைத் தொடர்ந்து சென்னை மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் மேற்கண்ட அறக்கட்டளை மற்றும் அதன் நிர்வாகிகளுக்கு எதிராக முகுந்த்சந்த் போத்ரா காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம் அன்பரசு, அவரது மனைவி கமலா, மணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2015-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. மேலும், அறக்கட்டளை நிர்வாகிகள் ரூ.35 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மூவ ரும் மேல்முறையீடு செய்த வழக் கில், சென்னை மாவட்ட 4-வது கூடு தல் அமர்வு நீதிமன்றம் தண் டனையை உறுதி செய்து 2017-ல் தீர்ப்பளித்தது. இவ்வழக்கு நிலு வையில் இருந்தபோது, கமலா இறந்துவிட்டதால் அவர் மீதான தண்டனை கைவிடப்பட்டது.

இந்நிலையில், சென்னை அமர்வு நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி அறக்கட் டளை மற்றும் இரா.அன்பரசு, மணி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ம் ஆண்டே மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:

முகுந்த்சந்த் போத்ரா ரூ.35 லட்சம் கடன் கொடுத்த ஆண்டில், தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் இந்த தொகை காண் பிக்கப்படவில்லை. கடன் கொடுத்த தொகைக்கு அவர் வரியும் செலுத்த வில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்க முடியாது. ஒருவரிடம் கடன் பெற்றுவிட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல், கடன் கொடுத்தவர் அந்தப் பணத்தை முறையாகச் சம்பாதிக்க வில்லை, வருமானவரி செலுத்த வில்லை என்றெல்லாம் கூற முடியாது. எனவே, 3 பேரின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மேலும், தண் டனையை உடனே நிறைவேற்றும் வகையில் இருவரையும் சிறை யில் அடைப்பதற்கான நடவடிக் கைகளை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in