Published : 24 Jul 2019 08:02 AM
Last Updated : 24 Jul 2019 08:02 AM

ஹைட்ரோ கார்பனை எதிர்த்து புதுவை பேரவையில் தீர்மானம் 

புதுச்சேரி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண் டாம் என்று புதுச்சேரி சட்டப் பேரவையில் மத்திய அரசை வலியறுத்தி தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த வேண்டாம் என மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை புதுச்சேரி சட்டப் பேரவையில் நேற்று முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய் தார்.

அப்போது அவர் பேசியதாவது: புதுச்சேரி, தமிழக பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க தனியார் நிறு வனத்துடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த அறிக்கை தயார் செய்ய மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

தனியார் நிறுவனம் நாகப் பட்டினம், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சுமார் 339 சதுர கி.மீ பரப்பளவிலும், கடல் பகுதியில் சுமார் 4,047 சதுர கி.மீ பரப்பளவிலும் இந்த எரிவாயு கிணறுகளை அமைக்கவுள்ளது. புதுச்சேரி பாகூர் பகுதியில் 2 சதுர கி.மீ நிலமும், காரைக்கால் பகுதியில் 39 சதுர கி.மீ நிலமும் இதற்காக கையகப்படுத்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த எரிவாயு கிணறுகள் 3,500 முதல் 4,500 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்பட உள்ளதாகத் தெரி கிறது.

இந்த திட்டம் புதுச்சேரி மாநிலத் துக்கும், பிற பகுதிகளுக்கும் ஏற்ற திட்டமல்ல, ஏற்கெனவே நீர் பற்றாக்குறையால் பாதிப்படைந்து உள்ள விவசாய நிலங்கள் முமுவதும் தரிசு நிலமாக மாறி விடும்.

வளர்ச்சி என்ற பெயரில் கொண்டு வரப்படும் இத்தகைய திட்டம் பல ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், மக்கள் வாழ்க்கையையும் சீர்குலைத்து விடும் நிலையில் உள்ளதால் இத் திட்டத்தை புதுச்சேரியில் செயல் படுத்த வேண்டாம் என்று மத்திய அரசை இச்சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டார்.

தீர்மானத்துக்கு கட்சிகள் ஆதரவு

இதைத்தொடர்ந்து காங்கிரஸ், திமுக, அதிமுக, என்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தக் கூடாது' என்ற இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டதாக சபாநாயகர் சிவகொழுந்து அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x