

தஞ்சாவூர்
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக தஞ்சாவூரில் நேற்று நடத்தப்பட்ட பெருந்திரள் பேரணியில் 800 பெண்கள் உட்பட 2,000 பேர் பங்கேற்றனர்.
காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இப்பெருந்திரள் பேரணி தஞ்சாவூர் டான்டெக்ஸ் ரவுண்டானா அருகில் இருந்து புறப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரைமாணிக்கம், மாநில துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணியில் 800 பெண் கள் உட்பட 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்கள், 2 கி.மீ தூரம் நடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தனர். பேரணியில் பங்கேற்றோர், ஹைட்ரோ கார் பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப் பினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையை காவிரிப் படுகை கூட்டியக்கம் சார்பில் சந்தித்த முக்கிய நிர்வாகிகள், ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரி மனுவை அளித்தனர்.
இந்த பேரணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சி யினர், காவிரி உரிமை மீட்புக் குழு, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
பேரணியால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை யில் போக்குவரத்து ஒன்றரை மணி நேரம் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது.
நாகப்பட்டினத்தில்..
இதேபோல, நாகை மாவட்டம் அவுரித் திடலில் நேற்று காவிரிப் படுகை கூட்டியக்கம் சார்பில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூ னிஸ்ட் கட்சிகள், திமுக. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டனர். கூட்டியக்க ஒருங்கி ணைப்புக் குழுத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளருமான நாகை மாலி தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பி னரும், முன்னாள் எம்எல்ஏவுமான மாரிமுத்து, திமுக விவசாய அணி மாநிலச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான ஏகேஎஸ்.விஜயன் மற்றும் அனைத்துக் கட்சியினர் கலந்துகொண்டனர். பின்னர் அங் கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்துக்கு பேரணியாகச் சென்றனர்.
அங்கு, ஆட்சியர் இல்லை என்பதை அறிந்தவுடன் அனை வரும் தரையில் அமர்ந்து முழக்க மிட்டனர். தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்டார்.
திருவாரூரில்...
இதேபோல, திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவ சாயிகள் சங்கத்தினர், அனைத்துக் கட்சியினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி தலைமையில் திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் வரை பேரணியாகச் சென்ற னர். ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.