அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்களை தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை, 

அஞ்சல் துறை தேர்வை ரத்து செய்ததற்கான நிர்வாகக் கார ணங்கள் குறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

அஞ்சல் துறையில் தபால்காரர், உதவியாளர் காலிப்பணியிடங் களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கான வினாத்தாளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தமிழ் உள்ளிட்ட மாநில மொழி களில் கேள்விகள் கேட்கப்பட வில்லை. இதை எதிர்த்து திமுக எம்எல்ஏ எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியன் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு இவ்வழக்கை விசாரித்தது. இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அஞ்சல் துறை சார்பில் 2 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,

மே 10-ம் தேதியிட்ட அறிவிப் பாணையில் அஞ்சல் துறை தேர் வில் இரண்டாம் தாள் அறிமுகப் படுத்தப்படுவதாகவும், அது மாநில மொழிகளில் நடத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டு, விண்ணப்பதாரரின் தகுதிகளில் ஒன்றாக ‘மாநில மொழியறிவு பெற்றிருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ஜூலை 11 தேதியிட்ட அறிவிப்பாணையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அஞ்சல் துறை தாக்கல் செய்த விளக்கத்தில் இந்த இரண்டு அறிவிப்பாணைகளும் திரும்ப பெறப்பட்டுவிட்டதாகவும், அதனால் தற்போதைய நிலையில் ஆள்சேர்ப்புக்கான எந்த நடை முறையும் நிலுவையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், நிர்வாகக் காரணங்களுக்காக அறிவிப்பாணைகள் ரத்து செய் யப்பட்டு விட்டதாகவும், இனி நடத்தப்படும் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், “மே மாத அறிவிப்பாணையில் மாநில மொழியறிவு இருக்க வேண்டும் என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளதே தவிர, மாநில மொழிகளில் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படவில்லை” என்று தெரிவித்தனர். மேற்கண்ட இரண்டு அறிவிப்பாணைகளை திரும்பப் பெறுவதற்கான நிர்வாக காரணங்கள் குறித்த முழு விவரங்களை வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி உரிய ஆவணங்களுடன் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று அஞ்சல் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in