

சென்னை
மழைநீர் சேகரிப்பில் அரசு தன் கடமையை தொடர்ந்து செய்து வருகிறது. பொதுமக்களும் அவர வர் இருப்பிடத்தில் மழைநீரை சேகரிப்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
சென்னை பெருநகர மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நீர் ஆதாரங்களை புனரமைத்து புத்துயிர் அளிக்கவும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேக ரிப்பு கட்டமைப்புகளை அமைக்க வும் தமிழக முதல்வரின் உத்தர வின்பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை அதி கரிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் ஏற்கெனவே உரு வாக்கப்பட்ட மழைநீ்ர் சேகரிப்பு அமைப்புகள் புத்துயிர் பெறு வது மட்டுமின்றி, புதியவை அமைப் பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலக வளாகங்கள், பூங்காக்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், பூங்காக்களில் மழைநீரை சேகரித்து அதை அந்த பூங்காக்களிலேயே பயன் படுத்துதல் மற்றும் கோயில் குளங் களை புனரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.
அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வர் உத்தரவின் பேரில், தற்போது சென்னை மாநக ராட்சியில் மழைநீர் கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வும் சென்னை மாநகரின் வார்டு உதவிப் பொறியாளர், குடிநீர் உதவிப் பொறியாளர், வரி வசூலிப்பவர், குடிநீர் பணிமனை மேலாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய 5 நபர்களை கொண்டு மாநகராட்சியின் மண்டல அலுவலர் தலைமையிலும். சென்னை குடிநீர் வாரிய வட்டார பொறியாளர் தலைமையிலும் வார்டு வாரியாக ஒரு குழு வீதம் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக பருவமழை காலத்துக்கு முன்னதாக ஒரு வார்டுக்கு ஆயிரம் கட்டிடங்கள் வீதம் 200 வார்டுகளில் 2 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்க இக்குழுக் களுக்கு இலக்கு நி்ர்ணயிக்கப்பட் டுள்ளது. இதுநாள் வரை இக்குழுக் களால் 1 லட்சத்து 10,674 கட்டிடங் ககளில் ஆய்வு மேற்கொள்ளப்பட் டுள்ளது. இதில் 56,740 கட்டிடங் களில் ஏற்கெனவே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் நல்ல நிலையில் உள்ளன. 16,065 கட்டி டங்களில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்புகளில் சிறு பராமரிப்பு பணி கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மேலும், 37,869 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் பயன்பாடில்லாமல் உள்ள 118 சமுதாய கிணறுகள் கண்ட றியப்பட்டுள்ளன. இக்கிணறுகளை புனரமைத்து மறு பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வாரி யம் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
மழைநீர் சேமிப்பு விஷயத்தில் அரசு தனது கடமையை செய்து வருகிறது. அதேநேரம் ஒரு குழுவோ, ஒரு அமைப்போ, ஒரு அரசோ முழுவதையும் செய்து முடிப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரவர் இருப்பிடத்தில் மழைநீரை சேகரிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாகும். மக்கள் அனைவரும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பே, மழைநீரை சேமிக்கும் வகையில் தங்கள் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.