சென்னையில் பரவலாக மழை; இன்றும் பெய்யும் என தகவல்

சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. காமராஜர் சாலையில் தேங்கிய மழை நீரை கிழித்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம். படம்: எல்.சீனிவாசன்
சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தது. காமராஜர் சாலையில் தேங்கிய மழை நீரை கிழித்துக் கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம். படம்: எல்.சீனிவாசன்
Updated on
1 min read

சென்னை

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக இடியுடன் மழை பெய்தது.

காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்றும் நீடித்தது. நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, திருவல்லிக்கேணி, மேடவாக்கம், எழும்பூர், பள்ளிக்கரணை, அடை யாறு, மடிப்பாக்கம், நன்மங்கலம், அண்ணாநகர், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி இரவு வரை இடியுடன் மழை பெய்தது.

இதனால் நகரில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கிய தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை புறநகர் பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கனமழையும் பெய் கிறது.

இந்நிலை அடுத்த 2 நாட்கள் வரை நீடிக்கும். மறுபுறம் வெப்பச் சலனம் மற்றும் தென் தமிழகத் தில் நிலவும் காற்று மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுச்சேரி யில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட் டத்துடன் காணப்படும். மாலையில் மிதமழைக்கு வாய்ப்புள்ளது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in