

காஞ்சிபுரம்
காஞ்சியில் அத்திவரதரை முதல்வர் பழனிசாமி நேற்று தரிசனம் செய்தார்.
அத்திவரதரை தரிசிப்பதற்காக முதல்வர் பழனிசாமி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு நேற்று மாலை வந்தார். இதை யொட்டி மேற்கு கோபுர வாசல் களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
முதல்வரை மாவட்ட ஆட்சியர் பொன்னையா, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அத்திவரதரை தரிசனம் செய்த முதல்வர் பின்னர் அங்கு பக்தர் களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.முதல்வர் வருகையையொட்டி சுமார் 15 நிமிடங்கள் மட்டும் பொது தரிசனம் நிறுத்தப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் விழா குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோ சனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, மாவட்ட ஆட்சியர் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.