Published : 24 Jul 2019 07:08 AM
Last Updated : 24 Jul 2019 07:08 AM

மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக திட்டங்களை திணிக்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

கி.கணேஷ்

புதுடெல்லி

நாட்டின் உட்கட்டமைப்பை மேம் படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை. அதேசம யம், மக்களை சமாதானப்படுத் தாமல் எந்த திட்டத்தையும் கொண்டு வர மாட்டோம் என்று டெல்லியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தெரிவித்தார்.

டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்தார். இதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், ‘‘தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி குறித்து மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ளேன். பல்வேறு இனங்களில் தமிழகத்துக்கு வேண் டிய நிதி குறித்து தெரிவித்தேன். அவரும் பரிசீலிப்பதாக கூறியுள் ளார்’’ என்றார். தொடர்ந்து செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, செயல் தலைவர் நட்டா இருவரையும் சந்தித்துள்ளீர்கள். இதில் அரசியல் உண்டா?

இந்த சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானதுதான். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை.

அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்ற ரீதியில் அமித்ஷாவிடம் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளதே?

அதில் ஒரு சதவீதம்கூட உண்மை இல்லை. பொதுவாக நான் யாரைப் பற்றியும், யாரிட மும் குறைபட்டுக்கொண்டு பேசுவது இல்லை. அவர்களாக கேட்டால் சொல்லும் வழக்கம் உண்டு. நேற்று அவரும் அப்படி எதுவும் கேட்க வில்லை. நானும் சொல்லவில்லை.

வேலூர் பிரச்சாரத்துக்கு பாஜக தலைவர்கள் வருகின்றனரா?

மக்களவைத் தேர்தலில் எங்க ளுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் தலைவர்கள் அனை வரும் இந்த தேர்தலில் பிரச்சாரத் துக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

உங்கள் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க முயற்சி எடுக்கப்பட்டதா?

பொதுவாக, அரசியல் தலைவர் களின் வாரிசுகளாக இருந்தாலும், தகுதி, திறமையுடன், பொதுமக் களின் நல்ல அபிமானத்தையும் பெற்றால்தான் அரசியலில் நீடிக்க முடியும். அது ரவீந்திரநாத்துக்கும் பொருந்தும்.

ஹைட்ரோகார்பன் திட்டத் துக்கு அனுமதி அளிக்கப்பட் டுள்ளதே?

சட்டப்பேரவையில் சட்ட அமைச்சர் விளக்கம் அளித்துவிட் டார். அதற்கு மேல் விளக்கம் கூறுவது சரியாக இருக்காது.

வயல்வெளியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு உள்ளதே?

முதல்வர் ஏற்கெனவே தெரிவித்தபடி, மக்களின் எண்ணங்களுக்கு மாறாக வயல்வெளியில் உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படாமல் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். மக்களின் எதிர்ப்பை மீறி பலவந்தமாக எந்த திட்டத்தையும் திணிக்க முடியாது. மக்களை சமா தானப்படுத்தாமல் எந்த திட்டத் தையும் கொண்டுவர மாட்டோம்.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்படுகிறதே?

நாட்டின் பொருளாதார, சமூக நிலை முன்னேற்றத்துக்கு உட்கட் டமைப்பு மேம்படுத்தப்பட வேண் டாமா? நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் கொள்கை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x